செங்கோட்டை அருகே ஐயப்பன் கோயில் சிலை உடைப்பு! காட்டுமிராண்டிகளின் வெறிச்செயல்!

33

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே ஐயப்பன் கோவில் சிலை உடைப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் திருக்கோவிலுக்கு உட்பட்ட நெல்லை மாவட்டம் புளியரை சதாசிவமூர்த்தி திருக்கோயில் கட்டுப்பாட்டிலுள்ள புதூர் கிராமத்தில் குளக்கரை உட்கோட்டை தர்ம சாஸ்தா அய்யனார் ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்தினை பராமரித்து வழிப்பாடு செய்யும் அரிகரபுத்திரன் என்பவரதுமகன் கணேசன் என்பவர் தனது மகனுக்கு மொட்டை போடுவதற்காக இன்றுகாலை குடும்பத்தோடு கோவிலுக்கு சென்றுள்ளனர்.

அப்போது கோவில் கதவு உடைக்கபட்டு கோவிலுக்குள் கருவறையில் இருந்த மூலவர் ஐயப்பன் சிலை பெரிய கல்லை தூக்கிபோட்டு சிலையை இரண்டாக உடைக்கப்பட்டு பாதி சிலை ஆலயத்தின் வெளியே உடைக்கப்பட்ட சிலை கிடைப்பதைக் கண்ட அவர் இன்று காலை புளியரை சதாசிவமூர்த்தி திருக்கோயில் அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு தகவல் சொல்லியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து புளியரை போலீசார் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் கொள்ளையடிப்பதற்காக நடத்தபட்டதா இல்லை வேறு காரணங்களுக்காக நடத்தப்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரப்பரப்பை உருவாக்கியுள்ளது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...