செங்கோட்டையை அடுத்துள்ள தேன்பொத்தையில் கேரள பிரபல இயற்கை வைத்தியர் உன்னி மாயா வெல்னெஸ் சென்டர் புதிய கிளை திறப்புவிழா நடைபெற்றது. இந்த கிளையை உஉயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கனகராஜ் திறந்து வைத்தார்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம், பாலோட்டில் சிறப்பாக இயங்கிவரும் வெல்னெஸ் சென்டர் தமிழகத்தில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பூலாங்குடியிருப்பில் தனது கிளையை விரிவாக்கம் செய்துள்ளது.

முழுவதும் இயற்கை முறையில், பத்தியமில்லாத, பக்கவிளைவுகள் இல்லாத வகையில் நீண்டநாள் தீர்க்கப்படாத அனைத்து வகை நோய்களுக்கும் சிறந்த முறையில் வைத் தியம் செய்யப்படுகிறது. நோயாளிகளின் மன அமைதிக்காக இயற்கை சூழந்த இடத்தில் இம்மருத் துவமனை அமைந்தள்ளது. ஏழை, எளிய மக்களின் நலனுக்காக மிக குறைந்த செலவில் இயற்கை வைத்தியம் செய்யப்படுகிறது.

பூலாங்குடியிருப்பு – மீனாட்சிபுரம் சாலை தேன் பொத்தையில் அமைந்துள்ள உன்னி மாயா வெல்னெஸ் சென்டரை மூத்த வழக்கறிஞ ரும், உச்சநீதிமன்ற முன் னாள் நீதியரசருமான கனகராஜ் திறந்து வைத்தார்.

புளியரை தொழிலதிபர் சுப்பிரமணியன தலைமை தாங்கினார். பூலாங்குடியிருப்பு வட்டார காங்கிரஸ் தலைவர் திவான். மீனாட்சிபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜாபர்அலி, தொழிலதிபர் விஸ்வநாதபுரம் வேலுச்சாமி, முன்னாள் வட்டாட்சியர் அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பத்தி ரிகையாளர் கோபி வரவேற் புரையாற்றினார். ஆசிரியர் ராஜா தொகுப்புரை வழங்கி னார்.

கருவூலத்துறை அதிகாரி முத்துப்பாண்டியன், தமிழ்நாடு அக்குபஞ்சர் தலைவர் சுபையர் அப் துல்லா, டாக்டர்கள் சுப்புராஜ், சாதிக்சபா, லட்சுமணன், காளிதுரை, உன்னிகிருஷ்ணன், சொக்கம்பட்டி, வி.பி காந்தி.
ஆடிட்டர் ஸ்ரீகுமார், வழக்கறிஞர் அருண் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் ஆசிரியர் ரவி நன்றி கூறினார்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...