மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா தொடக்கம்! வழிபட்ட பொன்.ராதாகிருஷ்ணன்!

கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கன்னியாகுமரியின் மேற்கு கடலோர பகுதியில் குளச்சல் அருகே மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது.  பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படும் இந்த கோயில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதற்கு முன், மூலஸ்தானத்தில் இருந்து திருக்கொடி மேளதாளத்துடன் கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதன்பின் கொடியேற்றப்பட்டு பூஜைகளும் நடந்தன. இதில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று பல்வேறு நகரங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்ள வந்துள்ளனர்.  இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள்.

கோவில் திருவிழாவையொட்டி பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபடுகின்றனர்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து நடந்த சமய மாநாட்டிலும் பங்கேற்றார்.

அப்போது பொன்.ராதாகிருஷ்ணனிடம் அ.தி.மு.க.-பாஜக., கூட்டணியில் தே.மு.தி.க. இணையுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பொன்.ராதாகிருஷ்ணன் “இந்தக் கூட்டணியில் நிச்சயம் தே.மு.தி.க. இணையும். அது தொடர்பான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று அல்லது நாளை தெரிந்துவிடும். இந்தக் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி.

ஐஜேகே திமுக.,வில் இணைந்திருப்பதால் பாஜக.,வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பார்ப்பதற்கு பிரமாண்டம் போல காட்சி தரும் திமுக. கூட்டணி, பண்டம் இல்லாத காலி டப்பா.


[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”73″ order=”desc”]


மதசார்பின்மைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக நாஞ்சில் சம்பத் கூறியிருக்கிறார். அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூறிய நாஞ்சில் சம்பத் மீண்டும் வந்திருப்பதால் தமிழக மக்களுக்கு மாரடைப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக பிரசாரம் செய்து வரும் பி.ஆர். பாண்டியன் அரசியல் பின்புலம் உடையவர். விவசாயிகளின் தலைவராக அல்லாமல் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்.

பாகிஸ்தான் மீதான தாக்குதல் சம்பவத்தை பாஜக., அரசியல் செயல்வதாகக் கூறுவது தவறு. பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்ததன் மூலம் கிடைத்த வெற்றியை அறிவிக்கும் கடமை பிரதமருக்கு உள்ளது. வெற்றியை கொண்டாடும் முதல் கடமை பிரதமருக்கும், 2-வது கடமை எதிர்க்கட்சிக்கும், 3-வது கடமை அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும், 4-வது கடமை மக்களுக்கும் உள்ளது என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...