அருவி நீருடன் பாம்பும் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

IMG 20190720 WA0005

திருநெல்வேலி மாவட்டம் தென்காசிக்கு அருகில் உள்ள திருக்குற்றாலம் மெயினருவியில் அருவி நீருடன் பாம்பு ஒன்று விழுந்ததால் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர்

குற்றாலம், மெயின் அருவியில் ஆர்ப்பரித்து விழுகிற தண்ணீருடன், இன்று (20-7-2019) கால, 7 அடி நீளமுள்ள “சாரைப்பாம்பு” ஒன்றும் சேர்ந்து வந்தது.

இதைக் கண்டு கரையோரம் நின்று கொண்டு இருந்த சுற்றுலா பயணிகள், அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

நாட்களுக்கு பிறகு தற்போது தான் மலைப் பகுதிகளில் நல்ல மழை பெய்து அருவிகளில் நீர் பெருக்கு அதிகரித்துள்ளது வெள்ள நீரில் இவ்வாறு பாம்பு அடித்து வரப்படுவது வழக்கமானது என்று அங்கிருந்த உள்ளூர் மக்கள் கூறினர்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.