திருச்சியில் கொரோனா… இன்று இரவு முதல் 50 பகுதிகள் முழுமையாக அடைக்கப் படும்: ஆட்சியர்!

தில்லி சென்று திரும்பியவர்களில், திருச்சி மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. 36 நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை. இதனை ஆட்சியர் அறிவித்தார்.

trichy collector sivarasu

திருச்சி மாவட்டத்தில் லால்குடி, புறத்தாக்குடி, முசிறி, கரட்டாம்பட்டி, உறையூர் பாக்குபேட்டை, தில்லைநகர், ரஹ்மானியாபுரம், உறையூர், பாளையம் பஜார், பீமநகர், அண்ணா நகர், புத்தாநத்தம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், தென்னூர் ஆழ்வார்தோப்பு, நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதி, அண்டகொண்டான், சமயபுரம் கூத்தூர், துவாக்குடி மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதை அடுத்து, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் இருப்பிடங்களைச் சுற்றியுள்ள மொத்தமாக 50 பகுதிகள் முற்றிலுமாக இன்று இரவு முதல் அடைக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

தில்லி சென்று திரும்பியவர்களில், திருச்சி மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. 36 நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை. இதனை ஆட்சியர் அறிவித்தார்.

இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது…

திருச்சி மாவட்டத்தில் 50 இடங்கள் இன்று இரவு முதல் முழுமையாக அடைக்கப்படும். மாவட்டத்தில் கொரோனா தொற்று 17 பேருக்கு உறுதி செய்யப்பட்ட்டுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் 125 பேர் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். அதில் 120 பேர் திருச்சி மாவட்டத்தையும் மீதமுள்ள 5 பேர் ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

corona alert

இவர்களில் ஈரோட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் கரூரைச் சேர்ந்த 2 பேருக்கும் ஏற்கெனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 120 பேரில் 117 பேர் தில்லி சென்று திரும்பியவர்கல். அவர்களில் 53 பேரின் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில், 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 36 பேருக்கு தொற்று இல்லை.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் இருப்பிடங்களை சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலுமாக இன்று இரவு முதல் அடைக்கப்பட உள்ளன. இங்கே 50 பகுதிகள் உள்ளன. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 25,586 குடியிருப்புகளில் 1,13,947 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் ஊரடங்கை முழுமையாக பின்பற்றவில்லை. நாளை முதல் அத்தியாவசியமான காரணங்கள் இன்றி வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்… என்று தெரிவித்தார்.

corono 6

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, புறத்தாக்குடி, முசிறி, கரட்டாம்பட்டி, உறையூர் பாக்குபேட்டை, தில்லைநகர், ரஹ்மானியாபுரம், உறையூர், பாளையம் பஜார், பீமநகர், அண்ணா நகர், புத்தாநத்தம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், தென்னூர் ஆழ்வார்தோப்பு, நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதி, அண்டகொண்டான், சமயபுரம் கூத்தூர், துவாக்குடி மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டுக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப் படுகிறது. இதை முன்வைத்து முஸ்லிம்கள் அங்கே போராட்டம் நடத்தியதின் விளைவாக, இவ்வாறு திட்டமிடப் பட்டு வருவதாகவும், மாவட்ட நிர்வாகத்திடம் மட்டன் பிரியாணி கேட்டு வற்புறுத்தியதாகவும் கூறப் படுகிறது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :