Home கல்வி ஆன்லைன் மூலம் சமஸ்கிருத வகுப்புகள்: சம்ஸ்க்ருத பாரதி தகவல்!

ஆன்லைன் மூலம் சமஸ்கிருத வகுப்புகள்: சம்ஸ்க்ருத பாரதி தகவல்!

samskritabharathi2
samskritabharathi2

கரூர் அருகே மகாதானபுரத்தில் இருந்து, பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு, ஆன்லைன் மூலம் சமஸ்கிருத வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதுகுறித்து, சமஸ்கிருத பாரதி தென் தமிழ்நாடு தலைவர் கல்யாண கிருஷ்ணன், ரட்சாதிகாரி மகாதானபுரம் ராஜாராம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில்…

கரூர் மாவட்டம், மகாதானபுரத்தில் தென் தமிழ்நாட்டின் முதல் உறைவிட பயிற்சி மையம், பாஷ்யம் சமஸ்கிருத சிக்ஷன கேந்திரம் என்ற பெயரில் கடந்த, 2017 முதல் செயல்பட்டு வருகிறது. அதில், சமஸ்கிருத பாடம் தொடக்க கல்வி முதல் உயர்படிப்பு வரை ஆன்லைன் மூலம் சொல்லி தரப்படுகிறது.

http://bhashyam.org/registration.php என்ற இணையதளத்தில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், 3,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஆன்லைன் வகுப்புகள் காலை, 11:00 மணி முதல், 12:00 மணி வரையிலும், இரவு, 7:00 மணி முதல், 8:00 மணி வரையிலும் நடக்கிறது.

சமஸ்கிருத பாரதியின் தன்னார்வலர்கள் மூலம், கிராமந்தோறும் இலவச சமஸ்கிருத வகுப்புகள் நடந்து வருகின்றன.

இந்த வகுப்புகள், ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் தொடர்ந்து நடைபெறும்…. என்று, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version