

மணப்பாறை அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மணப்பாறையில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்திய முனிவர், தாயுமான சுகசித்தர் வழிபட்ட திருத்தலமான அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றுள்ளது. 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் விழா என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயம் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமான அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றுள்ளது. இறைவன் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கும் இத்தலம், அகத்திய முனிவர், தாயுமான சுகசித்தர் வழிபட்ட திருத்தலமாகும்.
இங்குள்ள அம்பிகை மகாலெட்சுமி சொரூபமாக தனது இரு கைகளிலும் தாமரை மலரை வைத்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையால் சில மாதங்களாக ஆதிகாலத்து முறையில் திருப்பணியானது கருங்கல் வர்ண வேலைபாடுகளுடன் புணரமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் யாக வேள்விகள் நடைபெற்று இன்று காலை மங்கள இசையுடன் ஆறாம் காலம் யாக வேள்வி நடைபெற்று கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. புனித நீர் கும்பங்கள் சிவ பூதகண திருக்கைலாய வாத்திய இசையுடன், மேளத்தாள வாத்தியம், நாதஸ்வர இசையுடன் விமானம் வந்தடைந்தது. அங்கு சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க விமானம், மூலவர் மஹா குமாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அம்பாள் விமானம், பரிவார தெய்வாங்களின் விமானங்கள் புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மஹாதீபாராதணை நடைபெற்றது.
பின் மூலவர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் விழா என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயம் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.