
திருச்சி மாவட்டம் மணப்பாறை வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் மணப்பாறை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி மதிமுக சார்பில் ரயில் மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது .ரயிலை பறிக்க ஊர்வலமாக சென்றவர்கள் ரயில் நிலையம் முன்பு தடுத்து நிறுத்தி 75 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில், திருச்சி திண்டுக்கல் மார்க்கமாக மணப்பாறை வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் மணப்பாறை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி மதிமுக ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்திருந்தது.
அதனைத்தொடர்ந்து ரயில் நிலையம் பகுதியில் சட்டம் ஒழுங்கு போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார்கள் அதிக அளவில் காலை முதலே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில் பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாக கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களிட்டு சென்ற கட்சியினரை ரயில் நிலையம் முன்பாகவே போலீஸார் தடுத்தி நிறுத்தினர். இதில் இருத்தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் ரயில் மறியலில் ஈடுபட அனுமதிக்கவில்லை.
இதற்கிடையே மாலை மணப்பாறை ரயில் நிலையம் வந்தடைந்த குருவாயூர் அதிவிரைவு ரயிலுக்கு போலீஸார் பாதுக்காப்பு அளித்தனர். ரயில் நடைமேடையிலிருந்து புறப்பட்டபோது அங்கு பயணிகள் போல் வந்த மூன்று பேர் மதிமுக கட்சி கொடியினை கைகளில் ஏந்தி கோஷங்களிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து ரயில் மறியல் செய்ய வந்த மதிமுகவினர் 75 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்க பட்டனர்