
தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழையால் பயிர்கள் சேதமடைந்துவிவசாயிகள் பெரும் துயரத்திற்கு உள்ளாகினர்.
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆகியோர் மழையால் பாதித்த பயிர்களை ஆய்வு செய்வார்கள்.
நாளை மறுநாள் அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவிடம் பயிர் சேத விவரங்களைப் பெற்று இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் ஏற்பட்ட தொடர் கன மழையால் பாதிக்கப்பட்ட நெல் மற்றும் இதர வேளாண் பயிர்களை தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் இன்று கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பிராந்தியங்கரை, வாய்மேடு,ஆயக்காரன்புலம், பஞ்சநதிக்குளம், மருதூர், கருப்பம்புலம் உள்ளிட்ட சுற்றுப் பகுதி கிராமங்களில் மழையில் சாய்ந்து, வெள்ள நீரால் சூழப்பட்டுள்ள நெற்கதிர்களை அவர் பார்த்தார்.
முள்ளியாறு,மணக்காட்டான் வாய்கால்,மாணங்கொண்டான் ஆறுகளில் மழை நீர் வடிவதை தடுத்து வளர்ந்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகளையும் பார்த்தார்.
பின்னர் முளைத்து வரும் நெற்கதிர் கொத்துகளை செய்தியாளர்களிடம் காட்டி அவர் கூறியதாவது
நெல் பாதிப்புக்கு நிவாரணமாக 2020-21-ல் ஏற்பட்ட பாதிப்பின் போது இப்போதய முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிய ஹெக்டேருக்கு ரூ.75 ஆயிரதை ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் கணக்கீடு செய்து வழங்க வேண்டும்.
நெற்பயிருக்கான காப்பீடு திட்டம் தொடர்பான மகசூல் மாதிரி கணக்கெடுப்பை மறு ஆய்வுக்குள்படுத்தி விவசாயிகளுக்கு நூறு சதவீதம் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தினார்.