
திருச்சி அருகே திருவாசி என்ற இடத்தில் லோடு லாரியும், இன்று ஆம்னி வேனும் எதிரெதிரே கடுமையாக மோதிக்கொண்ட விபத்தில் காரில் கும்பகோணம் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த குழந்தை உள்பட 6 பேர் அதே இடத்தில் பலியானார்கள். மேலும் 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.இந்த விபத்து சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து கும்பகோணத்திற்கு செல்வதற்காக திருச்சி வழியாக ஆம்னி வேனில் குழந்தை உள்பட 9 பேர் பயணம் செய்தார்கள். இதேபோல், மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு திருச்சியில் இருந்து கரூர் நோக்கி ஒரு லாரி சென்றது. அந்த ஆம்னி வேன், மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி என்ற இடத்திற்கு இன்று அதிகாலை 3.50 மணிக்கு வந்தபோது லோடு ஏற்றிக்கொண்டு எதிரே வந்த லாரி இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் கடுமையாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் ஒரு குழந்தை, ஒரு பெண் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்று அதிகாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. இதில் அந்த ஆம்னி வேன் அப்பளம்போல் நொருங்கியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வாய்த்தலை போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மேலும் 3 பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து நடந்த இடத்தில் திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார் நேரில் சென்று விபத்து குறித்து ஆய்வு செய்தார். இந்த விபத்தினால், திருச்சி – சேலம் நெடுஞ்சாலையில் ஒரு மண நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாலை என்பதால் வாகன நெரிசல் குறைவாக இருந்தபோதும் பயணிகள் தாமடைந்தனர்.
போலீசார் விரைந்து அந்த போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அதிகாலை நேரம் என்பதால், டிரைவர்கள் யாராவது ஒருவர் தூங்கியிருக்கலாம்.
அதனால் இந்த விபத்து நடைபெற்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும் விபத்து குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
மேலும் இதுபோல் சாலைகளில் அதிகாலை விபத்துக்களை தடுக்க ஆங்காங்கே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சேலம் – திருச்சி சாலை குறுகலான ஒரு சாலையாக உள்ளது. அந்தச்சாலையை விரிவுபடுத்த வேண்டும் அல்லது சாலையில் ஆங்காங்கே விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த சாலையில் அடிக்கடி இதுபோன்ற விபத்து ஏராளமாக ஏற்படுகிறது என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருச்சி மாவட்டத்தில் மட்டும் இதுபோன்ற அதிகாலை விபத்துக்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் ஒரே கடும்பத்தைச் சேர்ந்த குழந்தை உள்பட 6 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.