- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் முதல் பெண் ஓதுவார் கரூர் சுகாஞ்சனாவுக்கு “தெய்வீகத் தமிழிசை மாமணி” விருது!

முதல் பெண் ஓதுவார் கரூர் சுகாஞ்சனாவுக்கு “தெய்வீகத் தமிழிசை மாமணி” விருது!

பெண் ஓதுவார்’ சுகாஞ்சனா கோபிநாத்தின் தெய்வீகத் திருமுறை தமிழிசை நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.

#image_title
IMG 20240812 WA0002

தமிழகத்தின் முன்னுதாரணமான முதல் பெண் ஓதுவார் கரூர் சுகாஞ்சனாவுக்கு “தெய்வீகத் தமிழிசை மாமணி” விருது வழங்கப்பட்டது.

கரூர் பரணி பார்க் கல்விக் குழும அறநெறி ஆசிரியராக ஆயிரக்கணக்கான மாணாக்கருக்கு தெய்வீகத் தமிழிசை, அறநெறி, நற்பண்புகளை தொடர்ந்து பல ஆண்டுகள் போதித்து, தற்போது சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவிலில் “பெண் ஓதுவாராக” தெய்வத் தமிழ்த் தொண்டாற்றி வரும் கரூர்-வேலாயுதம்பாளையம் சிவ.சுகாஞ்சனாவுக்கு பரணி பார்க் கல்விக் குழுமம் மற்றும் கருவூர் மகா அபிசேகக் குழு இணைந்து ‘தெய்வீகத் தமிழிசை மாமணி’ என்ற உயரிய விருது வழங்கி பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது.

கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் 26ஆம் ஆண்டு ஆடி தெய்வத் திருமண விழாவின் ஒரு பகுதியாக பெண் ஓதுவார் சிவ.சுகாஞ்சனாவின் தெய்வீகத் திருமுறை, தமிழிசைக் கச்சேரி கரூர் பரணி பார்க் கல்விக் குழும செயலர் பத்மாவதி மோகனரங்கன் தலைமையில் நடைபெற்றது.

ALSO READ:  Legendry  Carnatic vocalist MS’s family against award named after her to controversial singer TM Krishna!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கரூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பால்ராஜ், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் செயல் அலுவலர் சரவணன், தமிழக காவல் துறை கண்காணிப்பாளர் முத்துக்கருப்பண், தேனி சுந்தரலிங்க சுவாமிகள், பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன், கருவூர் மகா அபிசேகக் குழு தலைவர் ஆனிலை பாலகிருஷ்ணன், செயலர் ஸ்காட் தங்கவேல், கரூர் மாவட்ட வர்த்தக சங்க செயலர் வெங்கட்ராமன், மூத்த பத்திரிக்கையாளர் சிவராமன், பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் பள்ளி முதல்வர் சேகர் இணைந்து ‘பெண் ஓதுவார்’ சிவ.சுகாஞ்சனா கோபிநாத்க்கு “தெய்வீகத் தமிழிசை மாமணி’ விருது வழங்கி சந்தன மாலை பொன்னாடை அணிவித்து பாராட்டி கௌரவித்தனர்.

தொடர்ந்து, ‘பெண் ஓதுவார்’ சுகாஞ்சனா கோபிநாத்தின் தெய்வீகத் திருமுறை தமிழிசை நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.

பல ஆண்டுகள் அறநெறி ஆசிரியராகவும் தற்போது இளம் வயதிலேயே தமிழ்கூறும் நல்லுலகம் பாராட்டும் முன்னுதாரணமான முதல் ‘பெண் ஓதுவாராகவும்’ சிறப்பாகத் தெய்வத் தொண்டாற்றி கரூருக்கு உலக அளவில் பெருமை சேர்த்து வரும் சிவ.சுகாஞ்சனா கோபிநாத்தை கரூர் மாவட்ட ஆன்மீக அன்பர்களும், பொது மக்களும், பக்த கோடிகளும், அனைவரும் உளமாரப் பாராட்டி வாழ்த்தினர்.

ALSO READ:  இலவச பாஸை ரூ.500க்கு விற்று கல்லா கட்டிய கும்பல்!
ஆனந்தகுமார்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version