23/09/2019 1:21 PM

தீர்ப்பு இரண்டில் ஒன்றுக்கு வரவேற்பு; ஒன்றுக்கு எதிர்ப்பு: தினகரன்
தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டது. ஆனால், ஒரு குற்றவாளியின் படத்தை சட்டமன்றத்தில் திறக்கக் கூடாது என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும் கோரி, திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரி வாக்கெடுப்பு நடத்தியபோது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் கொறடா உத்தரவை மீறி, எதிர்த்து வாக்களித்தனர். எனவே அவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த இரு வழக்குகளையும் விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, இன்று இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

இவ்வாறு, பரபரப்பைக் கிளப்பிய இந்த இரு வழக்குகளிலும் தங்கள் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால் அதிமுக.,வினர் மகிழ்ச்சி அடைந்தனர். தீர்ப்பில் நீதிபதிகள் முக்கியமாக குறிப்பிட்டது அவைத்தலைவரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பது. எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் அவைத்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அகற்றக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்ததற்கு டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சட்ட ஆலோசனைக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் மயிலாடுதுறையில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaranRecent Articles

வெள்ளத்தில் டிக்டாக்; இளைஞருக்கு நேர்ந்த கதி.!

#தேசிய பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு படையினர் 48 மணி நேரம் தேடி இன்று காலை சடலமாக தினேஷ் மீட்கப்பட்டார்.#

டிரம்புக்கு… தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாரா மோடி..?

ஹூஸ்டனில் நேற்று பாரதப் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய மோடி, தனது நண்பர் என்று கூறி டிரம்ப்பை அறிமுகப் படுத்திவைத்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் தொழிற்பயிற்சி அளிக்கப்படும்! செங்கோட்டையன்!

பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மாணவா்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தமிழக அரசு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு ! வாபஸ் பெற தமிழிசை முடிவு?

தெலுங்கானாவின் ஆளுநராக பதவி ஏற்ற நிலையில் வழக்கை தொடர விரும்பவில்லை என்று தமிழசை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தைக்கு விபத்து! அறிவித்த வாட்ச்! உயிர் மீட்ட போலீஸ்!

அவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் சேதமடைந்த நிலையில் விபத்து நடந்து இருப்பதை உறுதிசெய்து நடந்த இடத்தையும், நபர் சுயநினைவை இழந்து கிடப்பதாகவும் குறுஞ்செய்தியை அவரது மகன் மற்றும் அவசர சேவை மருத்துவமனைக்கு மற்றும் அவசர அழைப்புக்காக கொடுக்கப்பட்ட எண் இரண்டிற்கும் குறுஞ்செய்திஅனுப்பியுள்ளது.

Related Stories