ஞாயிறு அன்று திருவரங்கம் நம்பெருமாள் சித்திரை ரத உத்சவ கற்பக விருக்ஷம் புறப்பாடு நடைபெற்றது.
தங்க ரேக் எனப்படும் தங்கத்தை மெல்லிய வெங்காய சரகு போல பல முறை தட்டி அதை பித்தளையில் செய்த இந்த வாகனத்தில் மேலே பதிய வைத்து அழகாக அமைத்திருப்பார்கள். தங்கம் நமது நவீன விளக்கொளியில் எந்த விதமாகவும் ஜொலிக்காது
ஞாயிறு அன்று பகல் முழுவதும் இந்த வாகனம் ஆஸ்தான மண்டபத்தில் வைத்திருந்தார்கள். அதனை அந்தப் பகுதிக்கு வந்த ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பார்த்து ரசித்துச் சென்றார்கள். இந்த வாகனத்தில் அரங்கன் எழுந்தருளினார்.
அரங்கனுடன் சேர்ந்து இந்த வாகனத்திலும் பல வண்ணங்களில், வெளிர் மஞ்சளில் இருந்து குங்குமபூ வண்ணம் (darker saffron color) வரை என மாறி மாறிக் காட்சி அளித்ததைக் கண்டு அன்பர்கள் அதிசயித்தார்கள்.