கஜா புயலால் பாதிப்படைந்தவர்களுக்கு வாழ்க்கை மீள வேண்டி கரூரில் 108 சங்காபிஷேகம்!


கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டியும், கஜா புயலில் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ வேண்டியும் அவர்களின் வாழ்க்கை மீள வேண்டிக் கொண்டும் 108 சங்காபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளாமானோர் பங்கேற்றனர்.

கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டியும், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் நலமுடன் வாழ வேண்டி கரூர் நகரத்தார் சங்கம்
சார்பில் 108 சங்காபிஷேக நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தின் முன் மண்டபத்தில், கலசம் மற்றும் 108 சங்குகள்
சூலாயுதம் வடிவில் அடுக்கி வைக்கப்பட்டு, விஷேச ஹோமங்கள் வளர்க்கப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.

மேலும்,, கலசங்களை ஆலயத்தின் உட்பிரகாரத்தில் ஊர்வலமாக வலம் வந்து பின்னர் மூலவராகிய பசுபதீஸ்வரருக்கு கலச நீரும், புனித சங்கு நீரும் கொண்டு விஷேச
அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. கரூர் நகரத்தார் சங்க தலைவர் சுப.செந்தில்நாதன் தலைமையில்
நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க, பக்தர்கள்
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.