இஸ்லாமிய மதமாற்றத்தை எதிர்த்த முன்னாள் பா.ம.க நிர்வாகி இராமலிங்கம் , வயது 45 , 5.2.2019 அன்று திருபுவனத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (PFI) பயங்கரவாதிகளால் வெட்டப்பட்டார்! இவர் கை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளது! இன்று காலை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் வீரமரணம் அடைந்தார்! கேரளாவில் கல்லூரி ஆசிரியர் ஜோசப் கையை வெட்டியது இந்த அமைப்பு தான் ! இன்று தமிழகத்தில் இந்த பயங்கரவாதச் செயல் நடந்தேறியுள்ளது! ஏன் என்னை மதம் மாற்றுகிறாய் என்று கேட்டதற்கு படுகொலை! ஹிந்துக்கள் பாதுகாப்பாக வாழக்கூட முடியாத மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது அபாயகரமானது!

மதம் மாற்ற முயன்றவர்களை தட்டிக்கேட்ட நபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கும்பகோணம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் சமையல் கலைஞர். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு உணவு தயாரித்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இதற்காக திருபுவனம் அருகில் உள்ள பகுதிகளில் உள்ளவர்களை வேலைக்கு எடுப்பது வழக்கம்.

நேற்று காலை உணவு சமைப்பதற்கு தேவையான வேலை ஆட்களை எடுப்பதற்காக அருகே உள்ள கிராமத்திற்கு ராமலிங்கம் சென்றுள்ளார். அங்குள்ள தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் தனது பணியாளர்களை ராமலிங்கம் தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த இரண்டு பேர், மதமாற்றம் குறித்து பேசியுள்ளனர். ராமலிங்கத்தின் தொழிலாளர்களிடம் மதம் மாறினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் ராமலிங்கத்தையும் மதம் மாறுமாறு கூறியதாக கூறப்படுகிறது.

அப்போது உணர்ச்சிவசப்பட்ட ராமலிங்கம் மதம் மாறு மாறு என்று கூறியவர்கள் அணிந்திருந்த குல்லாவை எடுத்து தனது தலையில் வைத்துக் கொண்டார். மேலும் தன் வசம் வைத்திருந்த விபூதியை அவர்கள் இருவருக்கும் பூசிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

உடனடியாக அந்த இருவரும் விபூதியை அழித்துள்ளனர். அப்போது நான் உங்கள் குல்லாவை வைத்திருக்கும் போது நீங்கள் மட்டும் ஏன் எங்கள் விபூதியை வைக்க மறுக்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பிறகு அங்கிருந்தவர்கள் ராமலிங்கம் மற்றும் இருவரையும் அங்கிருந்து விலக்கி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த ராமலிங்கத்தை மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டியுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமலிங்கம் உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அவரை தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். தஞ்சை செல்லும் வழியிலேயே ராமலிங்கம் உயிரிழந்தார். மதமாற்றத்தை தட்டிக்கேட்ட ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவலால் கும்பகோணத்தில் பதற்றம் ஏற்பட்டது.

இதனை அடுத்து தஞ்சை, நாகை, அரியலூர் மாவட்ட எஸ்.பிக்கள் மற்றும் ஐ.ஜி தலைமையில் போலீசார் கும்பகோணம், திருபுவனம் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

படுகொலை செய்யப் பட்ட ராமலிங்கத்துக்கு வைக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பேனர்

இதனிடையே நேற்று நள்ளிரவு படுகொலை செய்யப் பட்ட ராமலிங்கத்துக்கு இரக்கல் தெரிவித்து இன்று கண்ணீர் அஞ்சலி பேனர்கள் வைக்கப் பட்டிருந்தன. வேலூர் ஆட்டோ ட்ரைவர் சிவக்குமார் (பட்டியல் சமூகத்தவர்) பேட்டரியை இடுப்புக்கு கீழ் போட்டு துடிக்க துடிக்க கொன்றனர். இன்று வன்னிய சங்கத்தின் உறுப்பினர் இராமலிங்கத்தை துடி துடிக்க கொன்றுள்ளனர். ஜான் பாண்டியன்களும், டாக்டர் ராமதாஸ்களும் யோசிக்க வேண்டும் என்ற வேண்டுகோள்கள் இப்போது உலா வருகின்றன.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...