இஸ்லாமிய மதமாற்றத்தை தடுத்து வாக்குவாதம் செய்ததால் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாமக., நிர்வாகி திருபுவனம் ராமலிங்கம் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா இன்று திருபுவனம் வந்திருந்தார்.

ராமலிங்கம் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஹிந்து உணர்வு மேலிட இஸ்லாமிய மதப் பிரச்சாரத்தை தடுத்ததால் நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்ட முன்னாள் பாமக நிர்வாகி திருபுவனம் ராமலிங்கம் குடும்பத்தினரை இன்று காலை பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச் ராஜா, வழக்கம் போல் போலீஸார் எதையாவது சொல்லி இந்த விவகாரத்தை திசை திருப்பி விட முடியாது. பெண்கள் பிரச்சினையாக இருக்கும்; பணப் பிரச்சினை இருக்கும்; பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருக்குமோ என்றெல்லாம் போலீஸார் கருத வாய்ப்பு இல்லாத வகையில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.

இவர் மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 10 மணி நேரத்தில் கொல்லப்பட்டிருக்கிறார். பகல் 12 மணிக்கு அந்த சம்பவம் நடந்தது இரவு 12 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. எனவே போலீசார் தங்கள் தந்திரங்களைக் காட்டி, திசைதிருப்புதல் இயலாது

எனவே அனைத்து இந்து சமுதாய தலைவர்களுக்கும் நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் இந்த நாட்டில் மதச்சார்பின்மை என்பது இந்து மதத்தை மட்டுமே அழிக்க பயன்படுத்தும் ஒரு வார்த்தை. அதோடு மட்டுமல்ல இந்த சம்பவத்துக்கு முன் முஸ்லிம்கள் மதத் தீவிரவாதிகள் மதமாற்ற இங்கு வருகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

திருமாவளவன் திருச்சியில் சனாதன இந்து தர்மத்தை வேரறுப்போம் என்று கூட்டிய மாநாட்டுக்கு வேற்று நாடுகளில் இருந்து வந்த பல்வேறு இயக்கங்களில் இருக்கக் கூடிய தீவிரவாத சக்திகளை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சனாதன இந்து தர்மத்தை வேரறுப்போம் என்று பேசுகிறார்.

ஸ்டாலின் பேசியதற்கான செயல் வடிவம்தன் இது என்று நான் குற்றம் சாட்டுகிறேன்! இதுவரை ஸ்டாலின் இந்த சம்பவத்துக்கு எதிர்த்து எதுவும் பேசவில்லை! இதே நேரம் ஒரு முஸ்லிம் இப்படி கொல்லப்பட்டிருந்தால் திருமாவளவன் வைகோ சீமான் எல்லோரும் வாய் திறந்து இருப்பார்கள். சனாதன தர்மத்தை அழிக்க வேண்டுமென்றால் உணர்வுள்ள ராமலிங்கம் போன்றவர்களை அழிக்க வேண்டும் அதற்கான செயல்பாடுதான் இது!

இங்கே உள்ளூர் டிஎஸ்பி யாரென்று எனக்குத் தெரியாது. இவர்கள் கடை வைத்து பிழைத்து கொண்டிருக்கிறார்கள். அந்த வாகனத்தையும் செல்போனையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள் போலீஸார். கொலை செய்தவர்களின் விவரங்களைத்தான் அறிய வேண்டும் கைது செய்ய வேண்டும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்! ஆனால் பலியான ஒருவரது செல்போனையும் வாகனத்தையும் பறிமுதல் செய்து இருக்கின்றனர். அது தவறு.

எனவே, இவர்களிடம் அந்த வாகனத்தை ஒப்படைக்கும் வரை ஹெச் ராஜா மெயின் ரோட்டில் தர்ணாவில் ஈடுபட வேண்டியிருக்கும். இந்துக்கள் அனாதைகளாக இருப்பார்கள்; காவல்துறையினர் ஏறி மேயலாம்; கல்யாணராமனை கைது செய்யலாம்; ஆனால் கொலைகாரனை தப்பவிடலாம் என்ற ஒரு சூழ்நிலையை நாம் அனுமதிக்க இயலாது

கல்யாணராமன் சமூக வலைதளங்களில் ஏதோ கருத்து எழுதினார்! அவரை பன்னாட்டு சர்வதேச பயங்கரவாதியைக் கைது செய்வது போல் விமான நிலையத்தில் அமர்ந்து கொண்டு நேரத்தை வீணாக்கி செலவு செய்து இருக்கிறார்கள் ஆனால் இங்கே பிரச்சினை நடந்தபோது ராமலிங்கத்துக்கு அந்தப் பாதுகாப்பு கொடுத்து இருப்பார்கள் என்றால் இந்தக் கொலை நடந்து இருக்காது

ஆகவே ராமலிங்கத்தினுடைய கடையை திறக்க வேண்டும்; கடைக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்’ குடும்பத்திற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்! அந்த வாகனத்தை உடனடியாக போலீசார் திருப்பி கொடுக்க வேண்டும்! குடும்பத்திடம் ஒப்படைக்க வேண்டும்! ஒப்படைக்கும் வரை ஹெச் ராஜா சாலையை விட்டு நகர மாட்டார் என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன்… என்று செய்தியாளர்களிடம் கூறியபடியே சாலையில் அமர்ந்தார் ஹெச்.ராஜா.

அந்த வீடியோ தொகுப்பு இங்கே…

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...