திருபுவனத்தில் படுகொலை செய்யப் பட்ட ராமலிங்கம் கொலை வழக்கில், கொலையாளிகளுக்கு இடம் கொடுத்து, கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற வகையில் 5 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கைதான முஸ்லீம்கள் 5 பேருக்கு ஆதரவாக ஜமாத் ஏற்பாடு செய்திருந்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். பெரிய அரசியல் கட்சிகளே தங்கள் கட்சித் தலைவர்கள் கைதாகும் போது வழக்கறிஞர்களைத் தேடி அலையும் நிலையில். கைதான 5 முஸ்லீம்களுக்கும் ஆதரவாக அவர்கள் கைது செய்யப் படுவதற்கு முன்பேயே வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து சட்ட உதவிகளைத் தொடங்கி விட்டது ஜமாத் என்று கூறப் படுகிறது.

ராமலிங்கம் கொலை குறித்த தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்ட உடனேயே இன்னொரு செய்தி வாட்ஸ் அப்களில் சுற்றிச் சுற்றி வலம் வந்தது. அதில், ஜமாத் என்ன என்ன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அதன்படி வழக்கறிஞர்கள் ஆஜராகியுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் ஆதரவாக நாளை பாப்புலர் பிரண்ட் சார்பாக போராட்டம் நடைபெறவுள்ளது.

கைதான நபர்கள் குறித்து வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கூறினர். இதில், வழக்கறிஞர்கள் என்ன சொல்ல வேண்டும் என்று தாங்களே இயக்குனர்களாக அவர்களிடம் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மாறினர். எந்த தகவலை தாங்கள் மீடியா மூலம் உலகுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை வழக்கறிஞர்களுக்குச் சொல்லிக் கொடுத்து, அதன் படி கூறவைத்து செய்தி சேகரித்தனர்.

வழக்கறிஞர்கள் கூறிய அந்த 5 பேரின் பெயர்கள்…

1) சர்புத்தீன், த/பெ யாக்கூப் வயது 60
2) முகம்மது ரிஸ்வான், த/பெ மந்திர் அலி, வயது 23
3) முகம்மது ரியாஸ், த/பெ ஹாஜா பக்ருத்தீன், வயது 27
4) நிஜாம் அலி, த/பெ சர்தார் கான், வயது 33
5) அஸாருத்தீன், த/பெ அப்துல் கலாம், வயது 26

முன்னதாக, சமூக ஊடகங்களில் வெளியான ‘ஜமாத் சுற்றறிக்கை’ என்ற பெயரில் வெளியான சுற்றறிக்கை இதுதான்…

நம் திருப்புவனம் பெரிய ஜமாத் அமைப்பில் உள்ள அனைவருக்கும் சலாத்தினை தெரிவித்துக் கொள்கிறோம். திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கில் கைது செய்யப்படும் நம் சகோதரர்கள் அனைவருக்கும் தார்மீக அடிப்படையில் முழு ஆதரவு அளிக்க ஜமாத் முன் வந்துள்ளது. கைது செய்யப்படும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் ஜாமீன் எடுக்க, அவர்களது குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்ய தங்களது வருமானத்தில் 2% தங்களது திருபுவனம் பெரிய ஜமாத் அமைத்துள்ள கமிட்டி தலைவர் சிராஜுதீன், செயலாளர் ராசுதீன் பொருளாளர் ஹாஜி முஹம்மது தாஜுதீன் மற்றும் சர்புதீன்(நிஸ்வான் மதரஸா தலைவர்), ஹிதாயதுல்லாஹ், ரஹ்மான் சாதிக் அகீயோர் கொண்ட கமிட்டியிடம் வாராவாரம் செலுத்த வேண்டும் என திருப்புவனம் பெரிய பள்ளிவாசல் ஜமாத்தினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. புது முஸ்லீம் தெரு ஜமாத் தலைவர் நூர்தீன், பெரிய பள்ளிவாசல் முத்தவல்லி ஹாஜி பஜலூர் ரஹ்மான் ஆகியோர் கைது செய்யப்படும் சகோதர்களின் குடும்பத்திற்க்கு தேவையான பொருள் உதவிகளை கவனிப்பார்கள். பாப்புலர் ஃப்ரண்ட்ன் திருப்புவனம் யூனிட் தலைவர் இலியாஸ், S.பைசல் முஹம்மது, SDPI அமைப்பின் திருப்புவனம் கிளை தலைவர் முஹம்மது ஆகியோர் கொண்ட குழு வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை ஏற்ப்பாடு செய்து வழக்குகளை கவனிக்கும். நம்மாலான முயற்சியில் கல்லாமையை இல்லாமை ஆக்கி மிஞ்சுவோம்.

“விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக!” – அல்குர்ஆன் (16:125)

வஸ்ஸலாம்.

இப்படிக்கு, 
திருப்புவனம் பெரிய ஜமாத்

வழக்கறிஞர்கள் ஊடகங்களில் கொடுத்த பேட்டி…யின் காணொளி:

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...