ஐ லவ் திருச்சி – செல்ஃபி எடுக்கலாம் வாங்க..!

மாநகரில் திறந்தவெளி உடற்பயிற்சி பூங்காக்கள், செயற்கை நீரூற்றுகள், வண்ண விளக்கு அலங்காரங்கள், சுவரோவியங்கள் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

i love trichy selfiecorner

தமிழகத்தின் மையப்பகுதியாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சி விளங்கி வருகின்றது. திருச்சிராப்பள்ளி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு மாநகரில் பல அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

மாநகரில் திறந்தவெளி உடற்பயிற்சி பூங்காக்கள், செயற்கை நீரூற்றுகள், வண்ண விளக்கு அலங்காரங்கள், சுவரோவியங்கள் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது திருச்சி என்றால் மலைக்கோட்டை ஞாபகத்துக்கு வரும். அந்த அளவில் மலைக்கோட்டை வாசல் நுழைவாயில் அருகே செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டு ஐ லவ் திருச்சி வாசகம் அமைக்கப்பட்டுள்ளது. காலையில் வண்ண எழுத்துக்களுடன் இருக்கும் ஐ லவ் திருச்சி இரவில் விளக்கு ஒளிரும் வெளிச்சத்தில் ஐ லவ் திருச்சி ஜொலிக்கின்றது.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் சுற்றுலா பயணிகளும் ஐ லவ் திருச்சி வாசகத்துடன் அழகிய செல்பிகளை எடுத்துச் செல்கிறார்கள். இதனால் ஐ லவ் திருச்சி வாசகம் வைரலாகி வருகிறது.

  • யோகா விஜய்
Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :