தமிழ் தேர்வில் காப்பியடித்த 9 பேர் பிடிபட்டனர்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழ் இரண்டாம் தாளில் காப்பியடித்ததாக 9 பேர் பிடிபட்டுள்ளனர்.
கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 1 மாணவர், திருச்சியில் 3 மாணவர்கள் உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 9 மாணவர்கள் பிடிபட்டுள்ளதாக தேர்வு கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கெனவே தமிழ் முதல் தாளில் காப்பியடித்ததாக 3 மாணவர்கள் பிடிபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எளிதாக இருந்த இரண்டாம் தாள் இதனிடையே, பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வைக் காட்டிலும் இரண்டாம் தாள் மிக எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.