மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்., ரெயிலில் பயணம் செய்ய இ-டிக்கெட் எடுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய வசதியினை இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது. இதன்மூலம் மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெயிலில் பயணம் செய்ய புகைப்படத்துடன் கூடிய தனி அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது. இதற்காக மருத்துவசான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் அடையாள அட்டை, வயது வரம்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், 2 புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் அந்தந்த ரெயில்வே கோட் ட மேலாளர் அலுவலக வணிக பிரிவை அணுகலாம். இல்லையெனில், அந்தந்த ரெயில்வே கோட்ட மேலாளர் வணிக பிரிவின் அலுவலக முகவரிக்கு சான்றிதழ்களின் நகல்களினை தபால் அனுப்பலாம். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன் அடையாள அட்டை வழங்கும் தேதி அறிவிக்கப்படும். இந்த அடையாள அட்டையை வேறொரு பயணிக்காக பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு ரெயில் பயணத்தின் போதும் “ஒரிஜினல்” அடையாள அட்டையையே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கலக்குது தெற்கு ரெயில்வே – மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய வசதி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari