பாலசந்தர் புகழ் என்றும் மெய்

K B Balachandar
Iyakunar Imayam Balachandar
  தெய்வத்தாய் பெற்றெடுத்து ஸர்வர் சுந்தரமாய் உழைத்து, பூஜைக்கு வந்த மலரை நீர்குமிழியாக்காமல், நீல வானத்திலே நானலை வளைத்து, மேஜர் சந்திரகாந்தாக பாமா விஜயமும் செய்து, சினிமா உலகில் எதிர் நீச்சலிட்டு, ரசிகர்களின் மனதில் தாமரை நெஞ்சமாகி, சிறந்த இயக்குநருக்கு பூவா தலையா போடவைத்து, பிரச்சினைகளை இரு கோடுகளாக்கி, பத்தாம் பசலியையும் மாற்றி அவர்களை எதிரொலியாக்கி, நவகிரகங்களையும் காவியத்தலைவர்களாக மாற்றி, நான்கு சுவர்களுக்குள் இருந்த சினிமாவை ரசிகர்களிடம் நூற்றுக்கு நுறு வாங்க வைத்து, தன் சிறந்த படங்களாலே புன்னகை புரிய வைத்து, அனைவரையும் கண்ணா நலமா என்று கேட்டு, வெள்ளி விழா படங்களை கொடுத்து, வேறு பட்ட கருத்துகளை அரங்கேற்றம் செய்து, சொல்லத்தான் நினைக்கிறேன் என்று அனைத்தையும் சொல்லி, அவள் ஒரு தொடர்கதையாகி, நான் அவனில்லை என்று சொல்லி, அபூர்வ ராகங்களை, மனமத லீலையாக்கி, அவர்களை கொண்டு பட்டின பிரவேசம் செய்து, நிழல்களையும் நிஜமாக்கி, தப்பு தாளங்களையும் சரியாக போட்டு, நினைத்தாலே இனிக்க வைத்து, நூலையே வேலியாக்கி, வறுமைக்கும் சிவப்பு நிறம் கொடுத்து, எங்க ஊர் கண்ணகியை உலகறிய செய்து, தில்லு முல்லு செய்யாமல் தண்ணீர் தண்ணீர் தந்து ஏக் துஜே கேலியேவில் தமிழனை இந்தி மொழியில் பிரபலமாக்கி, படங்கள் பல நாட்கள் ஓட வைத்து, அக்னி சாட்சியாக்க, பொய்க்கால் குதிரை கொண்டு, அச்சமில்லை அச்சமில்லை என்று சொல்லி, கல்யாண அகதிகளையும், சிந்து பைரவி பாடவைத்து, புன்னகை மன்னாகி, மனதில் உறுதி வேண்டும் என்று எல்லோருக்கும் செய்து, உன்னால் முடியும் தம்பி என்று எல்லோரையும் ஊக்குவித்து, புது புது அர்த்தங்களையும், ஒரு வீடு ஒரு வாசலில் அழகனை வைத்து, வானமே எல்லையாக, ஜாதி மல்லியோடு டூயட் பாடி, கல்கியாகி, பார்த்தாலே பரவசமான படங்களை தந்து, பொய்யாகி போன பாலசந்தரின் புகழ் என்றும் மெய்யாக இருக்கும். அவர் இறைவனிடம் சிறந்த இடத்தை பெற வாழ்த்துக்கள்