October 5, 2024, 7:52 AM
27.7 C
Chennai

Varalakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை

மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் ஑வரலக்ஷ்மி நமஸ்துப்யம்ஒ க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார்
வரலட்சுமி விரதத்துக்கு புராணக் கதைகள் உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.

பூவுலகில் சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.
இப்படி சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் பெண்கள்! சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமிதேவியை பூஜித்தல் இதன் சிறப்பு . திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.

எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோ டு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோ த்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.
கொஞ்சம் சாஸ்திரோக்தமாக விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோ த்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.

பூஜைக்குத் தேவையானவை :
 மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.

நிவேதனப் பொருள்கள்: 
பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

பழ வகைகள்: 
ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை…

பூஜைக்கான முன்னேற்பாடுகள்: 
வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.

(சில இடங்களில் வீட்டின் பூஜை அறை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலை, கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் போடப்படுகிறது.)

பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.

விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் & ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும். அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும்.

பூஜைக்குத் தேவையானவற்றை அருகில் வைத்துக்கொண்டு பூஜையைத் தொடங்கவும். பஞ்சாங்கம் பார்த்து, நாள், திதி, வருடம், பட்சம், மாதம் ஆகியவற்றை அறிந்து குறித்துக் கொள்ளவும்.

மேற்கொள்ளப்படும் விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.

விக்னேஸ்வர பூஜை
உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு, ஓம் அச்சுதாய நம: / ஓம் அனந்தாய நம: / ஓம் கோவிந்தாய நம: என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும். இது ஆசமனம்.

கையில் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்|
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே||

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ
விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே||
– என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை முன்னால் சேர்க்கவும். விக்னேஸ்வரரை எழுந்தருளச் செய்யும் ஆசனத்தையும் மணியையும் பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும். மணி அடிக்கவும். பின், பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும்.
அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயாமி / ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி & என்று சொல்லி, புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும்.

 இனி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ மஹாகணபதயே நம: என்று சொல்லி, கீழ்க்காணும் மந்திரம் சொல்லி அந்தந்த செயல்களைச் செய்ய வேண்டும்.

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி|
ஒஒ பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஒஒ அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஒஒ ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஒஒ ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்)
ஒஒ ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
ஒஒ வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
ஒஒ உபவீதம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
ஒஒ திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்)
ஒஒ அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்)
ஒஒ புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்)
புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும்.

ஓம் சுமுகாய நம: |
ஓம் ஏகதந்தாய நம: |
ஓம் கபிலாய நம: |
ஓம் கஜகர்ணாய நம: |
ஓம் லம்போதராய நம: |
ஓம் விகடாய நம: |
ஓம் விக்னராஜாய நம: |
ஓம் விநாயகாய நம: |
ஓம் தூமகேதவே நம: |
ஓம் கணாத்யக்ஷாய நம: |
ஓம் பாலசந்த்ராய நம: |
ஓம் கஜானனாய நம: |
ஓம் வக்ரதுண்டாய நம: |
ஓம் சூர்ப்பகர்ணாய நம: |
ஓம் ஹேரம்பாய நம: |
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: |
ஓம் ஸித்திவிநாயகாய நம: |
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:
அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும்.

அம்ருதோபஸ்தரணமஸி |
ஓம் ப்ராணாய ஸ்வாஹா |
ஓம் அபாநாய ஸ்வாஹா |
ஓம் வ்யாநாய ஸ்வாஹா |
ஓம் உதாநாய ஸ்வாஹா |
ஓம் ஸமாநாய ஸ்வாஹா |
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா |
மஹாகணபதயே நம:
அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி |
அம்ருத பிதாநமஸி என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்…
 பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும்.

வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப|
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா||
-& என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்யவும். அடைப்புக் குறிக்குள்() இருப்பவை இந்த வருடத்துக்கான ( ) நாள் நட்சத்திரங்கள்…

சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே, ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே, கலி யுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோர்& தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே, ப்ரபவாதி& ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, (  )நாம ஸம்வத்ஸரே, (  )அயனே, (  )ருதௌ, (  )மாஸே, (  )பக்ஷே, ()சுபதிதௌ, (  )வாஸரயுக்தாயாம், (  )நக்ஷத்ர யுக்தாயாம், சுபயோக சுபகரண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் சுப திதௌ,
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம், அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்ய அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம், உசிதகாலே ஆயுஷ்மத்ஸுரூப சுகுணபுத்ர அவாப்த்யர்த்தம், தீர்க்க ஸௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம், அரோக திடகாத்ரதா ஸித்யர்த்தம் ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ரஸாத ஸித்த்யர்த்தம், யாவச்சக்தி த்யான&ஆவாஹனாதி ஷோடச உபசாரை: ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே| &

என்று சங்கல்பித்து, அட்சதையை வடக்குப் புறம் சேர்க்கவும். உத்தரணி தீர்த்தத்தால் கையை துடைத்துக் கொண்டு, கையில் புஷ்பத்தை எடுத்துக்கொண்டு,

ஸ்ரீ விக்னேஸ்வரம் யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி |
சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ||
என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது சேர்த்து, மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் புறம் நகர்த்தி வைக்கவும்.

பின் கலச பூஜை செய்யவும். பஞ்சபாத்திரத்தை சந்தனம் குங்குமம் இட்டு, நீர் விட்டு, புஷ்பம் சேர்த்து, வலது கையால் மூடிக்கொண்டு,

கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி தாம்ரவர்ணீ
ஜலே அஸ்மின் ஸந்நிதிம் குரு||
என்று, புஷ்பார்ச்சனை செய்யவும்.

கங்காயை நம:|
யமுனாயை நம:|
கோதாவர்யை நம:|
ஸரஸ்வத்யை நம:|
நர்மதாயை நம:|
ஸிந்தவே நம:|
காவேர்யை நம:|
தாம்ரவர்ண்யை நம:
என்று பூஜித்து, தீர்த்தத்தை, பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்கள் மீது தெளிக்கவும்.

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:|
குருஸ்ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:||

என்று, குருவை தியானித்த பிறகு, ப்ராணப்ரதிஷ்டை செய்யவும்.

அஸ்ய ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
ப்ரம்ம&விஷ்ணு &மஹேச்வரா ருஷய: (வலது கையை தலை உச்சியில் வைக்கவும்)
ருக் யஜூஸ் ஸாம அதர்வாணிச் சந்தாம்ஸி (கையால் மூக்கு நுனியில் தொடவும்)
ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராணா சக்தி: பரா தேவதா (ஹ்ருதயத்தில் தொடவும்)
ஆம்&பீஜம், ஹ்ரீம்&சக்தி:, க்ரோம்&கீலகம்||

பிறகு, அங்கந்யாச கரந்யாசங்கள் செய்து தியானித்து, புஷ்பம் அட்சதையை தீர்த்தத்துடன் பின்வரும் மந்திரம் சொல்லி, கும்பத்திலுள்ள லக்ஷ்மி பிம்பத்தில் சேர்க்கவும்.

ஆவாஹிதோ பவ|
ஸ்தாபிதோ பவ|
ஸந்நிஹிதோ பவ|
ஸந்நிருத்தோ பவ|
அவகுண்டிதோ பவ|
ஸுப்ரீதோ பவ|
ஸுப்ரஸன்னோ பவ|
ஸுமுகோ பவ|
வரதோ பவ|
ப்ரஸீத ப்ரஸீத|
தேவி ஸர்வ ஜகன்நாயிகே யாவத் பூஜாவஸானகம்|
தாவத் த்வம் ப்ரீதி&பாவேன பிம்பே அஸ்மின் ஸந்நிதிம் குரு||

& இப்படி ப்ராணப்ரதிஷ்டை செய்து, புஷ்பம் அட்சதை, தீர்த்தம் விட்டு, பால் பழம் நிவேதித்து, வரலக்ஷ்மி பூஜையைத் தொடங்கவும்.

கும்பத்தில் வரலக்ஷ்மியை தியானிக்கவும்.

பத்மாஸனாம் பத்மகராம் பத்மமாலா விபூஷிதாம்|
க்ஷீர ஸாகர ஸம்பூதாம் க்ஷீரவர்ண ஸமப்ரபாம்|
க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம்|
பாவயே பக்தி யோகேன கலசே அஸ்மின் மனோஹரே|
வரலக்ஷ்ம்யை நம:|
என்று சொல்லி புஷ்பத்தை சேர்க்க வேண்டும்.

பாலபானு பரதீகாசே பூர்ண சந்த்ர நிபானனே ஸூத்ரேஸ்மின் ஸுஸ்திதா பூத்வா ப்ரயச்ச பஹுலான் வரான்||
என்று, 9 முடிகள் போட்ட சரடில் பூ முடித்து, கும்பத்தில் சாற்ற வேண்டும்.

ஸர்வ மங்கல மாங்கல்யே விஷ்ணு வக்ஷ: ஸ்தலாலயே|
ஆவாஹயாமி தேவித்வாம் அபீஷ்ட பலதா பவ||
வரலக்ஷ்மீம் ஆவாஹயாமி|
& என்று சொல்லி புஷ்பத்தை கும்பத்தில் சேர்த்து ஆவாஹனம் செய்யவும்.

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பாத்யம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அர்க்யம் ஸமர்ப்பயாமி (புஷ்பத்துடன் தீர்த்தம் விடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆசமனீயம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி (தேன் கலந்த தயிர் நிவேதனம்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி (பஞ்சமிர்த நிவேதனம்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஸ்நானம் ஸமர்ப்பயாமி (தீர்த்த ப்ரோக்ஷணம்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி (வஸ்திரம் அல்லது அட்சதை)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கண்டஸூத்ரம் ஸமர்ப்பயாமி (கருகமணி/பனைஓலை அணிவிக்க)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆபரணானி ஸமர்ப்பயாமி (ஆபரணங்கள் அணிவிக்கவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கந்தம் ஸமர்ப்பயாமி (சந்தனம் இடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அக்ஷதான் ஸமர்ப்பயாமி ( அட்சதை சேர்க்கவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி (புஷ்பம், மாலை சேர்க்கவும்)

பிறகு அங்க பூஜை செய்யவும்.
முழுதாகச் செய்யாவிடினும், மகாலட்சுமி பிம்பத்தின் பாதம் முதல் சிரசு வரை பூஜிப்பதாக பாவனை செய்து, ஓம் ஸர்வமங்களாயை நம: ஸர்வாண் அங்காநி பூஜயாமி என்று சொல்லி புஷ்பம் அட்சதை ஸமர்ப்பிக்கவும்.

பின், நூற்றியெட்டு போற்றி அல்லது அஷ்டோ த்ரசத நாமம் சொல்லி, புஷ்பம் அல்லது குங்கும அர்ச்சனை செய்யவும்.

author avatar
செங்கோட்டை ஸ்ரீராம்
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் அக்.05 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - அக்.05ஸ்ரீராமஜயம் - ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்||श्री:||...

டிவி ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் ‘டேமேஜ்’தான்!

நம்மில் பலரும், வீட்டில் உள்ள மற்ற பொருட்களை போலவே ஸ்மார்ட் டிவியையும் சுத்தம் செய்யும் பழக்கத்தினை கொண்டுள்ளோம். ஆனால் உங்களுக்கு தெரியுமா?

வடகிழக்குப் பருவமழைக் காலத்திற்கான நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு!

நவம்பர் 2024க்கான மழை மற்றும் வெப்பநிலைக்கான கண்ணோட்டத்தை அக்டோபர் 2024 இறுதியில் இந்திய வானிலை ஆராய்ச்சித் துறைவெளியிடும். வடகிழக்குப்

பஞ்சாங்கம் அக்.04 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம்- கொச்சுவேலி ரயில் மீண்டும் இயக்கம்! முன்பதிவு தொடக்கம்!

இந்த ரயிலை நிரந்தரமாக சாதாரண முன்பதிவு பெட்டிகள் மற்றும் முன்பதிவு இல்லாத சாதாரண ரயில் பெட்டிகள் இணைத்து இயக்க தமிழக கேரள ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

Topics

பஞ்சாங்கம் அக்.05 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - அக்.05ஸ்ரீராமஜயம் - ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்||श्री:||...

டிவி ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் ‘டேமேஜ்’தான்!

நம்மில் பலரும், வீட்டில் உள்ள மற்ற பொருட்களை போலவே ஸ்மார்ட் டிவியையும் சுத்தம் செய்யும் பழக்கத்தினை கொண்டுள்ளோம். ஆனால் உங்களுக்கு தெரியுமா?

வடகிழக்குப் பருவமழைக் காலத்திற்கான நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு!

நவம்பர் 2024க்கான மழை மற்றும் வெப்பநிலைக்கான கண்ணோட்டத்தை அக்டோபர் 2024 இறுதியில் இந்திய வானிலை ஆராய்ச்சித் துறைவெளியிடும். வடகிழக்குப்

பஞ்சாங்கம் அக்.04 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம்- கொச்சுவேலி ரயில் மீண்டும் இயக்கம்! முன்பதிவு தொடக்கம்!

இந்த ரயிலை நிரந்தரமாக சாதாரண முன்பதிவு பெட்டிகள் மற்றும் முன்பதிவு இல்லாத சாதாரண ரயில் பெட்டிகள் இணைத்து இயக்க தமிழக கேரள ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

ஸ்ரீவி., வடபத்ரசாயி பிரமோத்ஸவம் நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயிலின் பிரமோத்ஸவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மாணவர்களுக்கான ‘திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி’; மதுரை ஆட்சியர் அழைப்பு!

1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவர்களுக்குப் பரிசுத்தொகையாக ரூ.15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) வழங்கப்பெறும்.

பழநி கோயிலுக்கு நீதிமன்றத்தால் … ஒரே வருடத்தில் ஒன்றரை கோடி ரூபாய் வசூல்!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு, கைப்பேசி பாதுகாப்பு நிலையத்தின் மூலம், ஓராண்டில் ரூ. 1.51 கோடி வசூல் ஆகியுள்ளது.

Related Articles

Popular Categories