அண்ணா.. என்னண்ணா நீங்க ஒன்னும் கருத்து எதுவும் சொல்லக் காணோம்… ஏதாவது சொல்லுங்கண்ணா..!
எதப் பத்தி தம்பீ…?
என்ன இப்படிக் கேட்டுட்டீங்க..? இந்த ரோட்டப் பத்தித்தான்..
ஓ.. ஈரோடா? (ஏதாவது சொல்லியாகணுமே..! இல்லன்னா நம்மள சர்னலிச்ட்னே மதிக்க மாட்டாய்ங்களே… இன்னா சொல்லலாம்..?! 🙁 🙂 )
அதாவது தம்பீ… அந்த மக்கள்லாம் எடப்பாடிக்கு நன்றிக்கடன் பட்டிருக்காங்க… அவங்க எல்லாம் இப்போ பழனி சாமிக்கு வயிறார மனமார உளமார நன்றி சொல்லோணும்…
அதெப்டி சொல்றீங்கண்ணா…?!
தம்பீ… இடைத்தேர்தல்ல 90 சதம் ஆளுங்கட்சிதான் செயிக்கும்னு நல்லாத் தெரியும்..! அதனால நாம போட்டிபோடுறது வேஸ்டுன்னும் பழனி சாமிக்கு தெரியும். ஆனாலும்… மக்கள் மேல வெச்ச பரிதாப உணர்வு, பாசத்தால… நாங்க போட்டியிடுறோம்னு களத்துல இறங்கி…
களத்துல இறங்கி தோத்துட்டாங்கல்ல அண்ணா…
இல்ல தம்பீ… சொல்ல வுடு என்னைய! களத்துல இறங்கி… மக்களுக்கு எவ்ளோ பரிசுகள் பணம்லாம் கிடைக்க வெச்சிருக்காரு..!? அவரு மட்டும் தன் கட்சி ஆள போட்டி போட வைக்கலீன்னா… அந்த மக்கள ஆளும் தரப்பு யாராச்சும் சீண்டியிருப்பாங்களா..? யோசிச்சிப் பாரு..!