கதிகலங்கும் திமுக., கூடாரம்! நாடே பார்த்தது டிவி.,யில்! அது எல்லாம் பொய்யாமே!?

இந்த அறிக்கைக்கு பலத்த எதிர்ப்பும் விமர்சனங்களும் வலுத்து வருகின்றன.

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக என்றைக்குமே இருந்ததில்லை என்று, ரிபப்ளிக் டிவி விவாதத்தில் பேசினார் திமுக., வழக்கறிஞரும் செய்தித் தொடர்பாளருமான சரவணன்.

அவரது பேச்சு பெரும் அதிர்ச்சியை நாடு முழுதும் ஏற்படுத்தியது. அவர் மீது தேச துரோக பேச்சு தொடர்பாக புகார்கள் கொடுக்கப் பட்ட  நிலையில், அவர் திமுக.,வின் நிலைப்பாடைத்தான் எடுத்து வைத்தார் என்று உறுதியாக கூறி வந்தார்கள்.

ஆனால், தற்போது நடவடிக்கை பாயும் என்ற நிலையில், சரவணன் அவ்வாறு பேசவில்லை என்று அப்பட்டமான பொய்யை திமுக., தற்போது கூறி வருகிறது. அதன் மூலம், தங்களது நிலையும், காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக இருந்தது இல்லை என்ற தங்கள் முந்தைய நிலைப்பாடு இப்போது இல்லை என்று தெளிவாக்கியுள்ளது.

இதற்கு கடும் விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளன. நாடு முழுக்க காதால் கேட்ட ஒரு பேச்சை, தான் அவ்வாறு சொல்ல வில்லை என்றும், ஆங்கிலத்தில், இஸ், வாஸ் என்ற சொல் பயன்பாடு என்றும் சிலர் சரவணனுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

இவ்வாறு பேசுவதும் கூட தேசத் துரோகப் பேச்சுக்கள் தான் என்று கருத்து தெரிவிக்கின்றனர் ஆர்வலர்கள்.

திமுக., என்பதே பொய்யில் பிறந்த கட்சிதான்!  பொய்களின் பிறப்பிடமே திமுக.,தான் என்று குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு ஏற்ப சரவணன் பெயரில் திமுக., வெளியிட்ட அறிக்கை இது…

***

“காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான பகுதி அல்ல என்றோ, இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவோ தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசவில்லை”

– கழக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் வழக்கறிஞர் அ.சரவணன் அவர்களின் விளக்க அறிக்கை.

கடந்த 12.08.2019 ரிபப்ளிக் டீவியில் காஷ்மீர் விவகாரம் பற்றிய விவாதத்தில், திமுகவின் சார்பாக கலந்துக்கொண்டேன். அந்த விவாதத்தின் பொழுது, திமுகவின் நிலைப்பாடு பற்றி விளக்கிய பின், காஷ்மீர் பற்றிய வரலாற்றை பேச முற்படுகையில், “Kashmir was never an integral part of India” என்று சொன்னவுடன், நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி மேற்கொண்டு பேச விடாமல் கடுமையான வார்த்தைகளால் தாக்க ஆரம்பித்தார். மற்ற பங்கேற்பாளர்களும் அவருடன் சேர்ந்து கடும் சொற்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். அர்னாப் கோஸ்வாமி விளக்கம் சொல்ல வேண்டுமென்று சொல்லிவிட்டு, விளக்கம் கொடுக்க வாய்ப்பளிக்காமல், நான் பேசியதை திரித்து, “Saravanan How can you say Kashmir is not a part of India” நான் “I said Was” என்று மறுத்து பதிலளித்தேன். இந்தியா சுதந்திரம் அடையும்பொழுது காஷ்மீர் இந்தியாவுடன் இல்லை. அதன் பின்னரே ராஜா ஹரிசிங், இந்தியாவுடன் சில நிபந்தனைகளோடு இணைந்துக்கொள்ள ஒரு ஒப்பந்தம் போடுகிறார். அதனை காஷ்மீர அரசியல் நிர்ணய சபை ஒத்துக்கொண்ட பின்னர் 1956ஆம் ஆண்டு, காஷ்மீர அரசியல் சட்டத்தின் 3ஆவது சரத்தின் படி “3. State of Jammu and Kashmir is and shall be an integral part of the Union of India.”. காஷ்மீரத்து பிரச்சனையை வரலாறு அறியாமல் பேசமுடியாது. இந்த வரலாற்று நிகழ்வை குறிக்கும் விதமாகத்தான் “Kashmir was never an integral part of India” என்று சொன்னேன். அதன் பின்னர் அந்த விவாதத்தில் மேற்சொன்ன கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பளிக்காமல், தொடர்ந்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதால், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன். சுமார் 16 நிமிடங்கள் அந்த விவாதத்தில் பங்கு பெற்றேன்.

சமூக வலைதளங்களில் பாஜகவினர், பாதியில் வெளியேறிய திமுக வக்கீல் சரவணன் என போட்டோ ஷாப் செய்து பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நான் ஏதோ காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான பகுதி அல்ல என சொன்னது போல பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது பாஜக. முழு வீடியோவையும் வெளியிடாமல், வெட்டியும், ஒட்டியும் வழக்கம்போல் இறங்கியுள்ளனர் பொய் புரட்டு பா.ஜ.க.வினர். அந்த விவாதத்தில் “Kashmir was never an integral part of India” என்று சொன்ன அடுத்த நொடி அர்னாப் கோஸ்வாமி, என்னை பேசவிடாமல்,

மற்றவர்களோடு சேர்ந்து கூச்சல் இடுகிறார். பேசியதை திரித்து “How can you say Kashmir is not an integral part of India” என்று “was” என்று சொன்னதை “is” என திரிக்கிறார். விளக்கம் சொல்ல விடாமல் மற்ற பாஜகவின் பங்கேற்பாளர்கள், கூச்சல் போட்டு பேச விடாமல், தொடர்ந்து கடும் வார்தைகளால் தாக்கினர்.

விளக்கம் சொன்ன பிறகும் மீண்டும் அதே கேள்வியை திரித்து கேட்டதால் “உங்களின் பலியாடு நான் அல்ல” என்று வெளியேறினேன்.

கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், “தேசபக்தி பாடத்தை எங்களுக்கு யாரும் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்திய-சீனா போரின்போதும், இந்திய-பாகிஸ்தான் போரின்போதும், கார்க்கில் போரின் போதும் நாங்கள் தாய் நாட்டின் பக்கம் நின்று, இந்தியாவிலேயே முதன் மாநிலமாக நிதிஉதவி செய்திருக்கிறோம்” என்று உரையாற்றியிருக்கிறார்.

கழகத் தொண்டராகிய நானும், இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக எந்தவொரு கருத்தையும் அந்நிகழ்ச்சியில் பதிவு செய்யவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியாக தெரிவிக்க விரும்புகிறேன்.

***

இந்த அறிக்கைக்கு பலத்த எதிர்ப்பும் விமர்சனங்களும் வலுத்து வருகின்றன.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...