அருண் ஜெட்லிக்கு எக்மோ சிகிச்சை !

சிறிது நேரத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் மருத்துவமனைக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உடல் நலக்குறைவு மற்றும் மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக கடந்த 9 ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெட்லி சேர்க்கப்பட்டார். 66 வயதாகும் அருண் ஜெட்லி தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் இவரை தொடர்ந்து மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர்ந்து 10 நாட்களாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சிகிச்சை பெற்று வருகிறார்.  அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு, டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இன்னும் சிறிது நேரத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் மருத்துவமனைக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று இரவு மருத்துவமனைக்கு சென்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இருவரும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினர்.நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்துவிட்டதால், இவரை சந்திக்க மருத்துவர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. முன்னதாக மருத்துவமனை சென்று அருண் ஜெட்லி நலம் குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ஜிதேந்திர சிங், பாஜக எம்.பி.,க்கள் மற்றும் அமைச்சர்கள், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் ஆகியோர் விசாரித்து அறிந்தனர்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த போது, ஜெட்லிக்கு மத்திய அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டன. 2014ல் மோடி தலைமையிலான அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக அருண் ஜெட்லி பொறுப்பேற்றார். மே 2014 முதல் மே 2019 வரை, நிதித்துறை மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்தார்.

2018ல் எய்ம்ஸ் மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அருண் ஜெட்லி, அந்த ஆண்டில் ஏப்ரல் முதல் அலுவலகம் வருவதை நிறுத்திக் கொண்டார். 2018ல் அருண் ஜெட்லிக்கு பதிலாக ரயில்வே அமைச்சராக இருந்த பியூஸ் கோயல் பட்ஜெட் தாக்கல் செய்தார். பின்னர் மீண்டும் அதே ஆண்டில், ஆகஸ்ட் மாதம் நிதி அமைச்சர் பொறுப்பபை அருண் ஜெட்லி ஏற்றுக் கொண்டார்.

இதற்கிடையில் 2014 முதல் 2017 வரை பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 2014 முதல் 2016 வரை தகவல், தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். சமீபத்தில் நடைபெற்ற 2019 மக்களவைத் தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக போட்டியிடவில்லை. மேலும் தனக்கு அமைச்சர் பதவி எதுவும் வேண்டாம் என்றும் கட்சி மேலிடத்தில் தெரிவித்திருந்தார்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...