கர்நாடக நடிகர்களின் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கண்டனம்

காவிரி பிரச்சினைக்காக விரைவில் அனைத்து சினிமா சங்கங்களுடன் இணைந்து உணர்வு பூர்வமான போராட்டம்… நாசர்

காவிரி பிரச்சினையில் கன்னட நடிகர்கள் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.தமிழக அரசுக்கு ஆதரவு. இன்றைய செயற்குழுவில் தீர்மானம்.

காவிரி நீரை சட்டப்படி பெற்று தந்த முதல்வருக்கு நன்றி. அரசுக்கு துணை நிற்போம். முதல்வரை விமர்சித்த கன்னட நடிகர்களுக்கு கண்டனம்… விஷால்

 

 

கன்னட நடிகர்களின் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க தென்னிந்திய நடிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் பொதுச் செயலாளர் விஷால் தலைமையில் நடந்தது.

கூட்டத்திற்கு பின்னர் நடிகர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

காவிரி நீர் பிரச்னையில் கர்நாடக நடிகர்கள் சிலர் தமிழக முதல்வருக்கு கொச்சை படுத்தும் வகையில் பேசியுள்ளனர். இதை கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

காவிரி பிரச்னையில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க உதவிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எங்களது சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் சங்க தலைவர் நாசர் கூறுகையில் ” காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்துவோம்” என்றார்.

நடிகர் கருணாஸ் பேசுகையில் ” காவிரி விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் நடிகர் சங்கம் உறுதுணையாக இருக்கும்” என்றார்.

பொதுக் கூட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன்,கருணாஸ், பொதுசெயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் மூவர் தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப் பட்டுள்ளனர்..