மீண்டும் சந்திக்கும் பிரதமரும்,அதிபரும்!

narendra modi trump

செப்.,23 முதல் 27 வரை நியூயார்க் நகரில் நடக்கும் ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, உரையாற்ற உள்ளார். இதற்காக செப்.,21 ம் தேதி அமெரிக்கா செல்லும் மோடி, செப்.,22 அன்று ஹூஸ்டன் நகரில் இந்திய – அமெரிக்க வம்சாவளியினரிடையே உரையாற்ற உள்ளார்.

‘Howdy Modi’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி அமெரிக்க நேரப்படி காலை 10 மணிக்கும், இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கும் நடக்க உள்ளது. இவ்விழாவில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இணைந்து உரையாற்ற உள்ளனர்.

drump modi

மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்து கொள்வதை வெள்ளை மாளிகையும் உறுதி செய்துள்ளது இந்திய பிரதமர் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் ஒருவர் பங்கேற்பது இது தான் முதல் முறையாகும். 2020 ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில், அமெரிக்கா வாழ் இந்தியர்களின் பங்கு ஒரளவு இருக்கும்.

ஹவுஸ்டன் நகரில் உள்ள மிகப்பெரிய என்.ஆர்.ஜி.ஸ்டேடியத்தில் வரும் 22-ம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் தெரிவித்து இதுவரை சுமார் 50 ஆயிரம் பேர் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

’பகிர்ந்த கனவுகள் – ஒளிமயமான எதிர்காலம்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் கருத்தரங்கில் பிரதமர் மோடி அமெரிக்காவாழ் இந்தியர்களிடையில் சிறப்புரையாற்றுகிறார்.

நான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானையும் சந்திக்க உள்ளேன். இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை குறைக்க அதிகளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்

இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதாக டிரம்ப் ஏற்கனவே அறிவித்துள்ளார்.”ஹவுடி மோடி ‘ நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பது குறித்து இந்தியதூதர் ஹர்ஸ் வர்தன் சிறிங்களா கூறுகையில், டிரம்ப் பங்கேற்பது வரலாற்றுப் பூர்வமானது. எதிர்பாராதது. இது இரண்டு வளர்ந்த நாடுகளுக்கு இடையிலான பிரிக்க முடியாத, வலிமையான நட்புறவையும், ஒத்துழைப்பையும் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :