அரசியல் மின்வாகன கொள்கை சிறப்பானது: வாடிக்கையாளருக்கு சலுகை தேவை!

மின்வாகன கொள்கை சிறப்பானது: வாடிக்கையாளருக்கு சலுகை தேவை!

சலுகைகளை வழங்க தமிழக அரசு முன்வந்தால் தமிழகத்தில் முதலீடுகள் குவியும் வாய்ப்புள்ளது. எனவே, மின்கல வாகனங்கள் விலையை குறைக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு சில மானியச் சலுகைகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

-

- Advertisment -

சினிமா:

பிக்பாஸில் ஆண்டி! இப்பொழுது ப்யூட்டி! ஷெரினின் புகைப்படத்தைக் கண்டு ஜொள்ளு விட்ட ரசிகர்!

அப்படி எண்ணியதற்கு இப்போது வருந்துகிறேன் சமூகவலைத்தளத்தில் தன்னுடைய தோற்றத்தைக் கிண்டல் செய்த ரசிகருக்குப் பதில் அளித்துள்ளார் ஷெரின். பெங்களூரைச் சேர்ந்த...

திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இசையமைப்பாளர் மரணம்!

கொரோனா வைரஸால் தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரை முடங்கியுள்ளன. படப்பிடிப்புகள்...

அக்கா செய்யாதது! தாராள தங்கையை கண்டு வாயடைத்த ரசிகர்கள்!

தமிழில் அடுத்தடுத்த குடும்ப படங்களையே தேர்வு செய்து நடித்து வந்திருந்தார். கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான...

விளக்கொளியில் நயன்தாரா அருகில் இருக்க.. இன்னொருவரை கெஞ்சும் விக்னேஷ் சிவன்! யாருட்ட கெஞ்சராரு தெரியுமா?

உன்னிடம் வேண்டுகோளாகவும், பிரார்த்தனையாகவும் வைக்கிறேன் உலகையே நாளுக்கு நாள் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானோ வைரஸை எப்படி ஒழிப்பது என நாடுகள்...
-Advertisement-

என்ன..? கொரோனாவ கிண்டல் செய்து வாட்ஸ்அப்ல தகவல் பரப்பினா … ஜெயிலா?!

இருந்தாலும் சாதாரண மக்களையும் பயமுறுத்தும் வகையில் இவ்வாறு வதந்தி பரப்புவதும் தவறுதான்! இந்நிலையில், வாட்ஸ் அப் குறித்து வரும் தகவல் வெறும் ஒரு வதந்தியே என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது!

கொரோனா… தீவிரத்தை இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் சமூகத்துக்குப் புரிய வைக்க வேண்டும்!

மீண்டும், மீண்டும் நாம் சொல்வது ஒன்று தான். இந்த விவகாரத்தை மதரீதியான விவகாரமாக நாம் பார்க்கவில்லை யென்றாலும் கூட, இதை மதரீதியான கண்ணோட்டத்துடன் தான் இஸ்லாமிய அமைப்புகள் சில அணுகுகின்றன.

அரசை கண்டித்து அறிக்கை விடும் தமுமுக., பிஎஃப்ஐ., இன்ன பிற இஸ்லாமிய அமைப்புகள் கவனத்துக்கு…!

முட்டாள் சமூகமாகவே இருக்க வேண்டாம் சற்று சிந்தியுங்கள். மார்க்கமும் குர்ஆனும் இஸ்லாமியர்களை ஒவ்வெரரு முறையும் சிந்திக்கவே சொல்கிறது.

இன்று இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்: நடிகர் ஜீவா டிவீட்!

இதற்கு நடிகர் ஜீவாவும் வரவேற்பு தெரிவித்து, தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் அவரது டிவிட்டர் பதிவு...

வாட்ஸ்அப் ஷேரிங் ஆப்ஷனில் கட்டுப்பாடு! எல்லாம் கொரோனா வதந்திகளால்!

வாட்ஸ்ஆப் - புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. கொரோனா தொடர்பான வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்புவதில் புதிய கட்டுப்பாடு கொண்டு...

என்ன..? கொரோனாவ கிண்டல் செய்து வாட்ஸ்அப்ல தகவல் பரப்பினா … ஜெயிலா?!

இருந்தாலும் சாதாரண மக்களையும் பயமுறுத்தும் வகையில் இவ்வாறு வதந்தி பரப்புவதும் தவறுதான்! இந்நிலையில், வாட்ஸ் அப் குறித்து வரும் தகவல் வெறும் ஒரு வதந்தியே என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது!

கொரோனா பாதிப்பு 4421ஆக உயர்வு: நல்ல செய்தி- 326 பேர் குணமடைந்துள்ளனர்!

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 748 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்! 56 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8 பேர் குணமடைந்துள்ளனர்.,

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. ஆனால், தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு பிரச்னையால், தொடர்ந்து 23வது நாளாக...

அட பாவிகளா… பிள்ளையார் கோவில் என்ன இஸ்லாமியர்கள் தங்கும் தனிமை முகாமா?! வெளங்குவீங்களா?!

ஒரு மசூதிக்கோ சர்ச்சுக்கோ ஹிந்துக்கள் சென்றால் அவர்கள் எவ்வாறு எதிர்ப்பார்கள்? அது தெரியாதா? எங்கே போயிற்று செக்யூலரிசம் என்று ஜகனிடம் கேட்கிறார்கள் பக்தர்கள்!

பிரதமருக்கு கடிதம் எழுதிய கமலுக்கு… அர்ஜுன் சம்பத் கண்டனம்!

உங்கள் மனசாட்சியை கேளுங்கள் பிரதமர் நரேந்திர மோடி இந்த நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மக்களையும் காப்பாற்றுவதற்கு எவ்வளவு சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பதை உங்களுக்கு புரியவைக்கும்.

தென்காசிக்கு வந்து… வீடுகளில் தங்கி… மலேசியா செல்லும் முன் பிடிபட்ட ‘தப்ளிக்’ நபர்கள்!

இந்த 10 பேரும் தென்காசியில் யார் யாரை சந்தித்தனர். எங்கு தங்கியிருந்தனர் என விமான நிலைய மருத்துவக் குழுவினர் தென்காசி மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

லாக்டவுனில்… உதவிகளுக்காக இந்து முன்னணி நிர்வாகிகள் களத்தில்!

நாடு சந்திக்கும் இந்த இக்கட்டான தொற்று நோய் பிரச்சனையிலிருந்து விடுபடவும், மக்கள் நல்லபடியாக வாழவும் மேற்கண்ட சேவைகள் உட்பட அவ்வப்போது தேவையான உதவிகளையும் ஆங்காங்கே உள்ள தொண்டர்கள் செய்து வருகிறார்கள்.

வெள்ளிக்கிழமை தொழுகையை தடுக்கச் சென்ற போலீஸுக்கு கல்வீச்சு: இது பாகிஸ்தானில்!

கூடுவதற்கு தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில், கூட்டத்தைச் சேர விடாமல் கலைக்கச் சென்றனர் போலீஸார். ஆனால் போலீஸாரை அவர்கள் ஓட ஓட விரட்டி, கற்களைக் கொண்டு எறிந்தனர்.

இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50; தப்ளிக் – 48; உயிரிழப்பு 6 ஆக உயர்வு!

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 50 பேரில் தில்லி மாநாட்டுடன் தொடர்புடையவர்கள் 48 பேர் என்று தமிழக சுகாதாரச் செயலர் பியூலா ராஜேஷ் தெரிவித்தார்.
- Advertisement -
- Advertisement -

தமிழ்நாட்டில் மின்கல வாகனங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் மின்கல வாகனங்கள் கொள்கையை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில்  பல்வேறு திட்டங்கள் மின்கல வாகனங்கள் கொள்கையில் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

இந்தியாவில் மின்கல வாகனங்களுக்கு மிகப்பெரிய சந்தை இருக்கும் நிலையில், அதை பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும், புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும்  தமிழகத்தில் மின்கல வாகன உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்; அதற்கான கொள்கையை விரைவாக வெளியிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. இத்தகைய சூழலில் தான்  ரூ.50,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு மின்கல வாகனங்கள் கொள்கை-2019ஐ தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டிருக்கிறார்.

 தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் வாகனங்களுக்கு மாநில அரசின் ஜிஎஸ்டி வரி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்; மின்கல வாகனங்கள், மின்னேற்றும் கருவிகள், மின்கலன்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகள் அமைக்கத் தேவைப்படும் நிலத்தின் விலையில் 20% வரை மானியம் வழங்கப்படும்; தென்மாவட்டங்களில் நில மதிப்பில் 50% வரை மானியம் வழங்கப்படும்; பத்திரப் பதிவின் போது முத்திரைத்தாள் கட்டண விலக்கு அளிக்கப்படும்; வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில், பணியாளர்களுக்காக செலுத்தப்படும் வருங்கால வைப்பு நிதி மானியமாக வழங்கப்படும் என்பன உள்ளிட்ட சலுகைகள் அக்கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் மின்கல வாகனங்களுக்கான மிகப்பெரிய சந்தையை பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கும் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்ப்பதற்கு இந்தக் கொள்கை பெரிதும் உதவும். தொழில் வளர்ச்சியில் தென்மாவட்டங்கள் மிகவும் பின்தங்கியுள்ள நிலையில், அங்கு முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு நில மதிப்பில் 50% மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் தென் மாவட்டங்களின் மின்கல வாகன தயாரிப்பு ஆலைகள் அமைவதற்கும், வேலைவாய்ப்புகள் பெருகுவதற்கும் வாய்ப்புகள் ஏற்படும்.

வணிக வளாகங்கள், திரையரங்குகள், உணவகங்களில் மின்னேற்றும் வசதி செய்யப்பட வேண்டும்; அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் இத்தகைய வசதிகளை கட்டாயமாக்கும் வகையில் கட்டிட விதிகளில் திருத்தம் செய்யப்படும் என்பது போன்ற அம்சங்களும் சாதகமான பயன்களை ஏற்படுத்தும். வாகனங்களுக்கு சாலைவரி மற்றும் பதிவுக் கட்டணங்கள் முழுமையாக விலக்கு ஆகியவையும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும். தமிழக அரசின் இந்த திட்டங்கள் பாராட்டத்தக்கவையாகும்.

ஆனால், இவை மட்டுமே மின்கல வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை சந்தையில் தமிழகம் முதலிடத்தை பிடிப்பதற்கு உதவாது. மின்கல வாகனங்களின் விலைகள் சாதாரண வாகனங்களின் விலைகளை விட பல மடங்கு அதிகம் எனும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு மானியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதன் மூலமாக மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும். ஆனால், மின்கல வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு பெரிய சலுகைகள் எதுவும் கொள்கையில் இடம்பெறவில்லை. சாலைவரி & பதிவுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ள போதிலும் அவற்றால் கிடைக்கும் பணப்பயன்கள் குறைவு என்பதால் அவை வாடிக்கையாளர்களை ஈர்க்காது.

மின்கல வாகனங்கள் உற்பத்தி மற்றும் மக்களை எளிதில் ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான ஃபேம் (Faster Adoption and Manufacturing of  Electric Vehicles – FAME) திட்டத்தின்படி ஒரு கிலோ வாட் மின்கல திறன் கொண்ட இரு சக்கர ஊர்திக்கு ரூ.10,000 மட்டுமே மானியமாக வழங்கப்படுகிறது. ஆனால், மின்கலனை தேவைக்கு ஏற்ற வகையில் மாற்ற கூடுதலாக ரூ.20,000 செலவழிக்க வேண்டியுள்ள நிலையில், ரூ.10,000 மானியம் எந்த வகையிலும் பயனளிக்காது. மாநில அரசுகளும் மானியம் வழங்கினால் மட்டுமே மின்கல வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்ற நிலையில், அதை உணர்ந்து கொண்ட தில்லி அரசு 15% முதல் 20% வரை கூடுதல் மானியம் வழங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மின்கல வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை பொறுத்தவரையில் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்கள், மாராட்டியம், குஜராத், தில்லி ஆகிய 7 மாநிலங்களிடையே  தான் கடும் போட்டி நிலவுகிறது. எந்த மாநிலத்தில் அதிக வரிச்சலுகைகள் வழங்கப்பட்டு, அதிகளவில் வாகனங்கள் விற்பனையாக வாய்ப்புகள் உள்ளனவோ, அங்கு தான் முதலீடு செய்ய நிறுவனங்கள் முன்வரும். முதலீட்டை ஈர்க்க தென் மாநிலங்களிடையே கடும் போட்டி நிலவும் சூழலில், விற்பனையை அதிகரிக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகளை வழங்க தமிழக அரசு முன்வந்தால்  தமிழகத்தில் முதலீடுகள் குவியும் வாய்ப்புள்ளது. எனவே, மின்கல வாகனங்கள் விலையை குறைக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு சில மானியச் சலுகைகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

  • டாக்டர் ராமதாஸ் (நிறுவுனர், பாமக.,)
- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,970FansLike
236FollowersFollow
813FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

எக்காலமும் செய்யலாம் தக்காளி தொக்கு!

தக்காளி, அரிந்த பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உ‌ப்பு சேர்த்து வதக்குங்கள்.

ஆரோக்கிய உணவு: திணை, சாமை பணியாரம்!

உளுத்தம் பருப்பு, துருவிய கேரட், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து சிறிது வதக்கவும்

பாசிப்பருப்பு டோக்ளா!

பிறகு எண்ணெயை காய வைத்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கி தேங்காய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை அனைத்தும் டோக்ளா மீது சேர்க்கவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |