டிரம்புக்கு… தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாரா மோடி..?

ஹூஸ்டனில் நேற்று பாரதப் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய மோடி, தனது நண்பர் என்று கூறி டிரம்ப்பை அறிமுகப் படுத்திவைத்தார்.

howdymodi trump

ஹூஸ்டனில் நேற்று பாரதப் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய மோடி, தனது நண்பர் என்று கூறி டிரம்ப்பை அறிமுகப் படுத்திவைத்தார்.

அடுத்து வருவது அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரம் என்பதால், இப்போதே டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டாரோ மோடி என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமூகத் தளங்களில் எதிரொலித்த கருத்துகளில் சில…

அமெரிக்க சரித்திரத்திலும் சரி, இந்திய சரித்திரத்திலும் சரி, அமெரிக்க மண்ணில் நின்று கொண்டு, அமெரிக்க அதிபரை ஒரு இந்தியப் பிரதமர் அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி நடந்திருக்கிறதா என்ன? இது வேற லெவல். இந்தியா என்பதை (தமிழகத்தையும் சேர்த்து) இனி மோடி மண் என்று சொல்வதுதான் சரி.


howdy mody

மோடி ஜியின் அமெரிக்க விஜயத்தின் வரவேற்பை பார்த்தால் !
டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக வரும்
தேர்தலில் வெற்றிப்பெற,
பிரச்சாரம் செய்ய மோடி ஜி
அமெரிக்கா சென்றாலும்
ஆச்சரியப்பட தேவையில்லை….


howdmody 1

ஹூஸ்டனில் மோடியும் ட்ரம்பும் சிம்ம கர்ஜனை புரிந்து கொண்டிருந்த அதே நேரத்தில், சௌதி மன்னரின் தனி விமானத்தில் இம்ரான் கான் அமெரிக்காவுக்குக் காவடி எடுத்து வந்து கொண்டிருந்ததை எத்தனை பேர் கவனித்தீர்களோ தெரியாது. NDTV மட்டும் அடிக் கோடிட்டுப் புலம்பிக்கொண்டே இருந்தது ரொம்பப் பாவமாகவும் பரிதாபமாகவும் இருந்தது.

இன்னும் சில மாதங்களில் Implosion ஆகி பாகிஸ்தான் ஆறு துண்டுகளாகச் சிதறப் போவதையும், அப்போது ஏற்பட இருக்கும் அகதிக் குழப்பங்களை சமாளிக்கப் போர்க்கால வியூகங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டு விட்டதையும் வைத்துப் பார்த்தால், இம்ரான் ஏதாவது லம்ப்பாக ரிட்டையர்மென்ட் பென்ஷன் வாங்கிக் கொண்டு “ஆளை விடு சாமி” என்று சவுதிப் பக்கம் பம்மி ஒதுங்கி விடும் சாத்தியம் உண்டு என்றே நினைக்கிறேன்.

அணுகுண்டு வைத்துக்கொண்டு கூத்தாடும் பாக். மிலிட்டரி பைத்தியங்களிடமிருந்து அவற்றை நேக்காகப் பிடுங்கிச் செயலிழக்கச் செய்ய அஜித் தோவல் தலைமையில், இஸ்ரேல் உதவியுடன், வியூகங்கள் வகுக்கப்பட்டு விட்டன என்றும் தெரிகிறது. பதிலுக்கு ஆஃப்கானில் உதவி கேட்டு ட்ரம்ப் கெஞ்சுவதற்கு மோடி காமராஜ் பாணியில் ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்றிருக்கிறாராம்.

இவ்வளவு டென்ஷனுடன் எல்லோரும் படு பிஸியாக இருக்கையில், “ஹிந்தி, பூந்தி, புர்ச்சி, புடலங்காய்” என்று ஏதாவது பூச்சாண்டி காட்டினால், கடுப்பில் போட்டு சாத்தி விடுவோம் சாத்தி’ என்று சுடலை அண்ட் கோவிற்குப் புரோகிதர் கவர்னர் மாளிகையில் மஹாளய ஆசீர்வாதம் செய்யப்பட்டதையும் இங்கே நினைவு கூர்க.

மொத்தத்தில் குருப் பெயர்ச்சி இந்தியாவுக்குப் படு சாதகம். பாகிஸ்தானுக்கு அதல பாதாளம். அமெரிக்காவுக்கு?

ஆப் கீ பார் ட்ரம்ப் சர்க்கார்!

  • ராம் ராமசந்திரன்

anand mahendra tweet

மோடி அவர்களின் அமெரிக்க விஜயம் மற்றும் அமெரிக்க ஜானாதிபதி மற்றும் அவர்களின் புகழ் பெற்ற அரசியல் தலைவர்கள் அவருக்கு அளித்த மரியாதை மற்றும வரவேற்ப்பு பற்றி பலர் மகிழ்ச்சியுடன் பேசி வருகிறோம் ..

நமது நாட்டில் திறமைகளுக்கு வாய்ப்பில்லை என்கிற பொது அயல் நாட்டில் வேலை பார்க்க செல்கின்ற நமது நாட்டினர் … அங்கே எப்படி பட்ட வரவேற்ப்பை பெறுகிறார்கள் என்பதை முடிவு செய்வது நமது நாட்டின் தலைமையே !!

இதற்க்கு முன்பாக இருந்த பிரதமர் மன்மோகன் சிங் , படித்தவர் பண்பாளர் என்பதை தாண்டி … ஊழலுக்கு எதிர்ப்பு காட்டும் வலிமை இல்லாதவர் என்பதால் பலரும் அவரை உள்நாட்டிலேயே மதிக்க வில்லை ..

வெளிநாடுகளில் இந்தியாவை காங்கிரஸ் ஆட்சியாளர்கள் எப்படி விற்பனை செய்தார்கள் என்பதை , ஆனந்த் மகேந்திரா அவர்கள் தனது சுய அனுபவத்தில் உணர்ந்து எழுதி இருக்கிறார் .
எனது உறவினர்கள் நண்பர்கள் அமெரிக்கா போய் விட்டு வருகிறவர்களிடம் கேட்ப்பேன் , நமது நாட்டை பற்றி அங்கே தெரியுமா ? அவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று ??

பதில் …

ஆடு மாடுகள் யானைகள் உலாவும் , கழை கூத்தாடிகள் மற்றும் பாம்பு வித்தை கான்பிக்கிரவர்கள் வாழும் நாடு என்பதாக அனைவரும் நினைத்து கொண்டு இருந்த நாடு ..

இன்று அமெரிக்க மண்ணில் .. அன்பர்களே இது இவர்தான் தான் ட்ரம்ப் என்று அந்த நாட்டின் ஜனாதிபதியை அவர்கள் ஊரிலேயே அறிமுகம் செய்யும் அளவிற்கு உயர்த்தி இருப்பது ….

நான் சத்தியமாக கனவில் கூட நினைக்க வில்லை எனது வாழ்நாளில் காண்பேன் என்று

  • விஜயராகவன் கிருஷ்ணன்
howdy mody fun

மரியாதைக்குரிய ட்ரம்ப் அவர்களே… 2017 ல் உங்கள் குடும்பத்தினரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தீர்கள். நான் இப்பொழுது எனது குடும்பத்தினரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் என்று கூறியபடி மோடி தன் இரு கைகளை விரித்து முன்னால் அமர்ந்திருக்கும் இந்திய மக்கள் கூட்டத்தினரை அறிமுகப்படுத்திய போது கூட்டம் எழுந்து நின்று ஆர்ப்பரித்து கை தட்டி மோடி மோடி என கோஷமிட்டு அரங்கத்தை அதிர வைத்தது.

Advertisements