ஸ்டாலின் செய்வது தேர்தல் விதிமுறை மீறிய செயல்: நடவடிக்கை எடுக்க ஹெச்.ராஜா கோரிக்கை!

இதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்.

10 July31 H raja

திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் சர்ச் பாதிரியார் திமுக., கூட்டணி தேர்தல் வெற்றிக்காக பிரார்த்தனை செய்து ஜெபம் செய்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது விதிமுறை மீறிய செயல் என்றும், இதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்.

இது குறித்து ஹெச்.ராஜா பதிவு செய்துள்ள டிவிட்டர் பதிவுகள்…

திரு.ஸ்டாலினுக்கு கிறிஸ்தவ மதம் ஏற்புடையதென்றால், இந்து மதம் மட்டும்
ஏற்புடையது இல்லையா?
இந்த மாதிரியாக செயல்படுகின்ற இந்து விரோத தீய சக்தி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்…

தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகம் இந்து விரோதமாக செயல்படுவது என்பது தொடர் நிகழ்வாகவே இருந்து வருகிறது. அண்ணா பல்கலைகழகத்தில் பிளாட்டோ பற்றியெல்லாம் இருக்கிற பட்சத்தில் பகவத்கீதையை ஒரு பாடமாக வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் திமுக, ஹிந்து மதம் தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும்

அதற்கு பெயர் மதசார்பின்மை என்று நினைக்கிறார்கள். காரணம் இந்துக்கள் சரியாக எதிர்வினை செய்வது இல்லை.

சில மாதங்களுக்கு முன்பாக திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு நெற்றியில் பொட்டு வைக்கும் போது அதை உடனடியாக பகிரங்கமாக அழித்து இந்துமத உணர்வுகளை காயப்படுத்தினார்.

ஆனால் நாங்குநேரியில் கிறிஸ்தவர்கள் கொஞ்சம் கணிசமாக இருக்கிறார்கள் என்பதற்காக சர்ச்சில் பிரார்த்தனை செய்து வாக்கு கேட்கிறார்.

அப்படியென்றால் கிறிஸ்தவமதம் ஏற்புடையது, இந்துமதம் ஏற்புடையது இல்லையா?

இந்த மாதிரியாக செயல்படுகின்ற வடிகட்டிய இந்துவிரோத தீயசக்தி… திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

“மாரியம்மன் கோயிலுக்கு சென்று பால் குடம் எடுத்தால் தான் நாங்கள் ஓட்டு போடுவோம் என்று இந்துக்கள் சொன்னால் கருணாநிதியே பால்குடம் எடுப்பார்”என்று ஒருமுறை துக்ளக் ஆசிரியர் மறைந்த திரு.சோ அவர்கள் தெளிவாக சொல்லி இருக்கிறார்.

இவர்களின் நோக்கம் தேர்தலில் வாக்கு, வெற்றி மட்டும் தான்.

பகவத் கீதையையையும் கண்ணபிரானையும் இழிவாகப் பேசுவிட்டு சர்ச்சிக்கு போய் தேர்தல் நேரத்தில் பிரார்த்தனை செய்து ஓட்டு கேட்பதுதான் மதசார்பின்மையா ?

இது தேர்தல் விதிமுறை மீறிய செயல். தேர்தல் ஆணைய அதிகாரிகள்… ஸ்டாலினுடைய இந்த நிகழ்ச்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் இனிமேல் இந்துக்களின் மத உணர்வுகளை தீண்டக்கூடாது என்றால் வாக்காள பெருமக்கள் இடைத்தேர்தலில் இந்த மாதிரியான இந்து விரோத தீயசக்திகளான காங்கிரஸ் மற்றும் திமுகவிற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :