ராமதா-ஸ்-டாலின்.. விடாது கருப்பாய் பஞ்சமி நில சர்ச்சை!

stalin ramadoss

அரசியலை விட்டு விலக தயாரா என்கிற தமது சவாலை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஏற்றுக் கொண்டால் முரசொலி அலுவலகத்தில் நிலத்தின் மூல ஆவணங்களை தர தான் தயார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் தமது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

முரசொலி அலுவலகம் தற்போது இருக்குமிடம் பஞ்சமி நிலம் எனும் பச்சைப் பொய் ஒன்றை மருத்துவர் அய்யா ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘அது பஞ்சமி நிலமல்ல; பட்டா நிலம்’ என்பதை ஆதாரத்துடன் அவருக்கு பதிலாக பதிவு கொடுத்தேன்.

“அவர் பஞ்சமி நிலம் என நிரூபித்தால் நான் அரசியலைவிட்டு விலகத் தயார்; இதை பஞ்சமி நிலம் என அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அவர் கூறியது பச்சைப் பொய் என்பதை ஊர்ஜிதம் செய்தால் அவரும், அவரது மகன் அன்புமணியும் அரசியலைவிட்டு விலகத் தயாரா என அறைகூவல் விடுத்திருந்தேன்.
நான் விடுத்த அறைகூவலை அவர் ஏற்பதாக உறுதிசெய்தால், அவர் இப்போது கேட்கும் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தைக் காட்டிட நான் தயார்! மருத்துவர் அய்யா நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அறைகூவலை ஏற்று ஆதாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்! நான் தயாராக இருக்கிறேன்!

‘விடாது பஞ்சமி நிலம்’… முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே? ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி

விவகாரத்தை திசை திருப்பாமல், அவரது வழக்கமான பாணியில் நழுவிடாமல் இந்தமுறை அறைகூவலை ஏற்பார் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :