திரு ஸ்டாலின், திமுக, தமிழ்நாடு

திரு ஸ்டாலின் அவர்களின் உழைப்பை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். அசர வைத்து விட்டார். தோல்வி மேல் தோல்வி. 2009ல் 2ஜீ, 3ஜீ என அனைத்து ஊழலில் சிக்கித்தவித்து தத்தளித்தது கட்சி. 2011ல் ஆட்சி இழப்பு. மிக மோசமான தோல்வி. 2013ல் சொந்த பந்தங்களுடன், கட்சி நிர்வாகிகளால் காங்கிரஸிடமிருந்து விலகல். 2014 தேர்தலில் மீண்டும் தோல்வி என்று சிக்கித் தத்தளித்து கொண்டிருந்த திமுக வை நிச்சயம் மீட்டெடுத்தார் என்பதில் சந்தேகமேயில்லை. ஊடகங்கள் என்னத்தான் திமுக வெற்றி பெறும் என்று சொன்னாலும், தன் கட்சியுடன் கூட்டணியாக வந்து சேர்ந்த அனைவரும் வெளியே சென்றாலும், காங்கிரஸ் என்ற சுமையை தோளில் தூக்க வேண்டிய கட்டாயம் வந்தாலும் அனைத்தையும் சமாளித்து நல்லதோரு ஊக்கமான வெற்றியை திமுகவிற்கு பெற்று தந்து தன்னால்தான் திமுக என்பதை நிலைநாட்டி உள்ளார். திமுகவிற்கு 25 சதவீததிற்கும் கீழே சென்ற வாக்குகளை தன் கடின உழைப்பினால், 32 சதவீதத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார், மேலும் தமிழகத்தில் தேடி பார்க்க வேண்டிய இடத்தில் இருக்கும் காங்கிரஸிருக்கு கிடைத்த 6 சதவீதமும் இவரால் தான் என்று நிச்சயம் கூறலாம். சில சமயம் தோல்வியிலும் வெற்றியை பார்க்க வேண்டும். அதிமுக வெற்றி பெற்றாலும் கிட்டதட்ட 89 இடங்களை பெற்று பலம் வாய்ந்த எதிர் கட்சியாக வந்திருக்கிறார். பல முனை போட்டியாக இருந்த தமிழகத்தை, இருமுகமாக மாற்றிய ஸ்டாலினை பாராட்டியே ஆக வேண்டும்.#நினைத்தேன்சொன்னேன்