
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா! தனது மகளின் திருமண அழைப்பிதழை மு.க.ஸ்டாலினிடம் வழங்கி அழைப்பு விடுத்தார்!
பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா, தனது இளைய மகள் திருமணத்தை ஒட்டி, அரசியல் கட்சிப் பிரமுகர்கள், முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டோரை சந்தித்து அழைப்பிதழைக் கொடுத்து வருகிறார்.

கடந்த வாரம் ரஜினிகாந்த் வீட்டுக்குச் சென்றிருந்த ஹெச்.ராஜா குடும்பத்தினர், அவரிடம் தனது இளைய மகள் திருமணத்துக்கு வரவேண்டும் என்று கூறி அழைப்பிதழ் கொடுத்தனர்.

தொடர்ந்து தேமுதிக.,தலைவர் விஜயகாந்த் வீட்டுக்குச் சென்று அழைப்பு கொடுத்தனர். அந்த வகையில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக., தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார். இந்த சந்திப்பு சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அரசியலுக்கு அப்பாற்பட்டு அரசியலில் நட்பைப் பேணும் விதமாக இந்த சந்திப்பு இருந்தது என்று பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.