ஜல்லிக்கட்டு: தமிழர்களின் ஒருங்கிணைந்த சக்திக்குக் கிடைத்த வெற்றி

அரசியல் கட்சிகள் ஆட்டம் காட்டி வந்த நிலையில், தமிழக இளைஞர்கள் லட்சக்கணக்கில் இணைந்து, அவசரச் சட்டத்தை் பிறப்பிக்க வைத்து சாதனை படைத்துள்ளனர்.

சென்னை: ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, பல ஆண்டுகளாக அரசியல் கட்சிகள், மத்திய, மாநில அரசுகள் சாதிக்க முடியாத சாதனையை, தமிழகத்தின் ஒன்றுபட்ட இளைஞர் சக்தி சாதித்துக் காட்டியுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கு வசதியாக, காட்சிப்படுத்தும் பட்டியலில் இருந்து காளை மாட்டை நீக்கும் அவசரச் சட்டம் மாநில அரசால் பிறப்பிக்கப்பட்து. இதன் மூலம், கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த இருந்த தடை விலகியது. அரசியல் கட்சிகள் ஆட்டம் காட்டி வந்த நிலையில், தமிழக இளைஞர்கள் லட்சக்கணக்கில் இணைந்து, அவசரச் சட்டத்தை் பிறப்பிக்க வைத்து சாதனை படைத்துள்ளனர். இதற்கு மெரினா மற்றும் மதுரையில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுரை போராட்டக் களத்தில் இருந்த ஒரு பெண் கூறுகையில் எங்களின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது, இந்தப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட போகிறோம். இது மிக மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

அலங்காநல்லூரரைச் சேர்ந்த சிலர், அவசரச் சட்டம் எங்களுக்கு வேண்டாம். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தெரிவித்தனர்.