10/07/2020 11:34 PM
29 C
Chennai

திராவிட இயக்கங்களிடம் இருந்து… ‘பஞ்சமி’ மட்டுமல்ல, கோயில் நில மீட்பும் அவசியம்!

முரசொலி குறித்து அதிமுக., பேசினால், சிறுதாவூர் குறித்து திமுக., பேசும் என்ற நிலையில், இரு தரப்புமே ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காமல், நெருக்கடி தராமல் இருக்க, ஒன்றை ஒன்று அனுசரித்துப் போகும் கள்ள உறவில் இருக்கின்றன.

சற்றுமுன்...

ஸ்டாலினின் பொறாமை காய்ச்சலை கட்டுப் படுத்தவே முடியாது!: ஆர்.பி.உதயகுமார்!

அத்தனை அறிக்கைகளும் பொய்யான, விஷமத்தனமான ,மக்களை அச்சுறுத்தும் வகையில் தான் இருக்கிறது

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்!

அவரது தாய் சாயா தேவி உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்தும் வருகிறார்கள்

100வது நாளாக ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் விநியோகம்: பாராட்டுப் பெற்ற பாஜக நிர்வாகி!

இந்தப் பணியில் என் மனைவி உணவு தயாரித்துக் கொடுத்தார். என் மகன்கள் உள்ளிட்ட இளைய தலைமுறை, உணவை அனைவருக்கும் சென்று விநியோகிக்க உதவியது.

தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு தொற்று: சென்னையில் 1205 பேருக்கு தொற்று உறுதி!

இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை 82,324 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்

பரவையில் கொரோனா பரிசோதனை முகாம்!

காலை 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெற்றதில் மொத்தம் 200 நபர்களுக்கு மேல் (Swap Test) எடுக்கப்பட்டது.
murasoli owner where திராவிட இயக்கங்களிடம் இருந்து... ‘பஞ்சமி’ மட்டுமல்ல, கோயில் நில மீட்பும் அவசியம்!

பஞ்சமி நில விவகாரத்தில், திமுக., மட்டுமல்ல, அதிமுக., வும் உச்ச பட்ச அளவில் முறைகேடுகளைச் செய்திருக்கிறது. முரசொலி குறித்து அதிமுக., பேசினால், சிறுதாவூர் குறித்து திமுக., பேசும் என்ற நிலையில், இரு தரப்புமே ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காமல், நெருக்கடி தராமல் இருக்க, ஒன்றை ஒன்று அனுசரித்துப் போகும் கள்ள உறவில் இருக்கின்றன.

மேடைகளில் கடுமையாக முழங்கினாலும், இரு திராவிடக் கட்சிகளுக்குள்ளும் இருக்கும் கள்ள உறவு, ஊழல் மற்றும் முறைகேடுகள் வெளிப்பட்டு விடக் கூடாது என்ற கொள்ளைக் கோட்பாடுதான் என்று குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இது குறித்து சமூகத் தளங்களிலும் கருத்துகள் பொதுவெளியில் பரவலாக்கப் பட்டு வருகின்றன.

முரசொலி – பஞ்சமி நில விவகாரத்தை ரொம்பவே நெருக்கினால் திமுகவும் அதிமுகவும் வழக்கம்போல் திரை மறைவில் கை கோர்த்துக்கொண்டு சிதம்பரம் கோவிலை அரசுடமையாக்கக் களம் இறங்குவார்கள் என்று தோன்றுகிறது. ஏற்கெனவே அதற்கான முன்னேற்பாடுகள் சில நடந்தேறி விட்டிருக்கின்றன. இந்து எழுச்சிக்கு (?!) சாதகமாக இதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று நம்மவர்களுக்கு கொஞ்சம் ஆசைகாட்டினால் போதும்… நல்ல ஐடியா என்று அந்த வலையில் சிக்கிக்கொள்வார்கள்.

சபரிமலை விவகாரம் போல் சிதம்பரம் கோவில் மீட்பு விஷயம் இல்லைதான்… ஆக்கப்படவும் முடியாதுதான். என்றாலும் முரசொலி முடக்கப்பட்டால் அதை ஈடுகட்டும்விதமான எதிர் தரப்பின் அரசியல் நடவடிக்கையாக அது இருக்கும்.

ஒருவகையில் முரசொலி தப்பிக்கும். கோவில் மாட்டிக் கொள்ளும் என்றே தோன்றுகிறது.

இன்னொரு வகையில் பார்த்தால் ஹிந்து கோவில் சொத்துக்கள் கிறிஸ்தவ அமைப்புகளால் நிறையவே ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. பிரிட்டிஷ் காலத்தில் அந்த அத்துமீறல்கள் 99 வருட லீஸ் என்ற பெயரில் தரப்பட்டுள்ளன. இன்று அவற்றைப் புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பித்திருக்கும். அதன் மீது கவனம் குவியாமல் தடுக்க இது கிளப்பப்பட்டிருக்கலாம். கழகங்களை நம்பாதிருத்தல், பின்னின்று இயக்கும் மத அடிப்படைவாத சக்திகளை இனம் கண்டு முடக்குதல், இந்து – கோவில் மீட்பு என தெளிவான செயல் திட்டம் தேவைப்படும் நேரம் இது.

முதலில் எந்தெந்தக் கோவில்களின் நிலங்கள் யார் யார் கையில் என்னென்ன வகையில் இருக்கின்றன என்பது பற்றிய வெள்ளை அறிக்கையை பாஜகவே ஒவ்வொரு கோவிலுக்குமாக ஒரு ஆர்.டி.ஐ. போட்டுத் தெரிந்துகொண்டு தொகுத்து வெளியிடலாம்.

வேற்று மதத்தவர்களிடம் இருக்கும் கோவில் சொத்துக்களை முதலில் மீட்டு மதம் மாறாத எளிய இந்துக்களுக்கு குத்தகை யாகக் கொடுப்பது தொடங்கி, பல்வேறு இந்து நலன்களுக்காக அதைப் பயன்படுத்தலாம்.

பஞ்சமி நில மீட்பு போலவே கோவில் நில மீட்பும் மிக மிக அவசியம்.

  • B.R. மகாதேவன் (எழுத்தாளர்)
jayalalitha திராவிட இயக்கங்களிடம் இருந்து... ‘பஞ்சமி’ மட்டுமல்ல, கோயில் நில மீட்பும் அவசியம்!

எஸ்சி ஆணையத்திடம் முரசொலி நிலத்திற்கான எல்லா ஆவணங்களையும் கொடுத்து நிரூபிப்போம் என்று சொன்ன திமுக மூலபத்திரம் உள்பட எந்த ஒரு ஆவணத்தையும் கொடுக்கவில்லை என்பது ஒரு விஷயமே அல்ல. ஆனால் அவர்கள் அதையும் மீறி பஞ்சமி நிலத்தை அபகரித்து வைத்துள்ளவர்களுக்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார்கள்.

பஞ்சமி நிலத்தை யார் அபகரித்து வைத்திருந்தாலும் கவலைப்பட வேண்டாம். அதை விசாரிப்பதற்கு எஸ்சி ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. அதனால் மற்ற சமுகத்தவர்கள் பயப்பட வேண்டாம் என்று தமிழகத்தில் பஞ்சமி நிலத்தை அபகரித்துள்ளவர்களுக்கு அறிவுறுத்தி யிருக்கிறார்கள். இதுதான் மிகப்பெரிய ஆபத்து. பஞ்சமி நிலத்தை அபகரித்து வைத்திருப்பவர்களுக்கு இது புதிய தெம்பை அளிக்கும். ஆணையத்திற்கு பயந்து அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை திருப்பிக் கொடுக்கக்கூடிய மனநிலையில் உள்ளவர்கள்கூட இனி பயப்படமாட்டார்கள். இந்த உளவியலைத்தான் திமுக இப்போது ஏற்படுத்தியிருக்கிறது. இது அப்பட்டமாக பட்டியல் சமூத்தவர்களுக்கு திமுக செய்யும் அயோக்கியத்தனம், துரோகம்.

  • ம.வெங்கடேசன் (பாஜக., )

ரெண்டு கட்சியிலேயும் நாலு களவானிப் பயலுக பஞ்சமி நிலத்தை ஆட்டையப் போட்டிருக்கானுக. அதான் இப்ப எல்லாப்பயலுவலும் நடுங்குறானுக! அதனால் தான் உங்களிடம் இருக்கும் ஆதாரங்களையும் எங்களிடம் கொடுத்து உதவுங்கள் என்று அதிமுக கேட்கிறது.

முரசொலி சிக்கினா நாமளும் சிக்குவோமேன்னு மத்த எல்லாருக்கும் கலக்கம்.

மவனே நான் சிக்கினா உங்க எல்லாரையும் சிக்க வைச்சுடுவேன்னு சுடலையின் மறைமுக கெத்து!

பேராசிரியர் ஸ்ரீநிவாசன் ஜி விலை பேசப்படலாம் அல்லது வேறு விதமாக மிரட்டப்படலாம். பின் வாங்காமல் போராடி ஜெயிச்சுட்டார்னா, தமிழக அரசியலில் மிக முக்கியமான இடத்திற்குச் சொந்தக்காரராகி விடுவார். வாழ்த்துகள்

  • ஆனந்தன் அமிர்தன்

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மூன்று சேப்பாக்கம் கிரிக்கட் ஸ்டேடிய காலரிகளை இடிக்கச்சொல்லி உச்சனீதிமன்றம் 2015 ல் உத்திரவிட்டது .
.
இன்று வரை உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை!காலரிகளை இடிக்கவில்லை..

ஆனாலும் தமிழ்னாடு கிரிக்கட் சங்கத்துக்கு குத்தகை நீட்டிப்பு வழங்கி இருக்கிறது எடப்பாடி அரசு!

எடப்பாடி அரசு ஊழலில் திளைக்கிறது என்பதற்கு இந்த செய்தி ஒரு சான்று!

போகிற போக்கில் தமிழகத்தை அரேபிய சுல்த்தானுக்கு பட்டா போட்டு கொடுத்தாலும் கொடுப்பார்கள்!

  • ஜெபமணி மோகன்ராஜ்
- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்