ஆளுநரை மிரட்டிய சசிகலா: ஓரளவுக்குதான் பொறுமை காக்க முடியுமாம்!

ஜனநாயகத்துடன் நம்பிக்கையுடன் இருப்பதால் கொஞ்சம் அமைதி காக்கிறோம். ஓரளவுக்கு மேல்தான் நாம் பொறுமையைக் கையாள முடியும். அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து நாம் செய்ய வேண்டியதைச் செய்வோம்

சென்னை:
‛ஆளுநர் காலம் தாழ்த்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கையோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது’ என ஆளுநரை குறை கூறிய சசிகலா, ஓரளவுக்கு மேல்தான் தங்களால் பொறுமைகாக்க முடியும் என்றும் கூறினார்.
கூவத்தூரில் இருந்து போயஸ் கார்டன் திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” எம்.எல்.ஏ.,க்கள் எல்லோரையும் சந்தித்தேன். அவர்கள் மன உறுதியுடன் உள்ளனர். குடும்ப உறுப்பினர்களை சந்தித்த திருப்தி கிடைத்தது. இன்று (பிப்.,11) வரை பொறுமை காத்தோம். நாளை முதல் எங்கள் போராட்டம்  வேறு விதமாக இருக்கும். ஆளுநர் காலம் தாழ்த்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கையோ என சந்தேகிக்க தோன்றுகிறது.” என்று கூறினார்.

ஜனநாயகத்துடன் நம்பிக்கையுடன் இருப்பதால் கொஞ்சம் அமைதி காக்கிறோம். ஓரளவுக்கு மேல்தான் நாம் பொறுமையைக் கையாள முடியும். அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து நாம் செய்ய வேண்டியதைச் செய்வோம் என்று அவர் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரவுடிகள் பலர் சென்னையில் பல இடங்களில் தங்கியிருப்பதாகவும், போலீஸார் அதுகுறித்து விவரங்கள் சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அவரது பேட்டியில் ஒரு பகுதி…