தமிழகம் மறக்க முடியாத நாள் பிப்ரவரி 14 : ராம.கோபாலன்

இத்தகைய கொடூர நிகழ்விலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்த பலிதானி நினைவாக நினைவு ஸ்தூபி (தூண்) பிரதான சாலையில் நிறுவப்பட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகம் மறக்க முடியாத நாள் அந்த கோவை தொடர் குண்டுவெடிப்பு நாள் என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

1998 பிப்ரவரி 14 அன்று பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் 13 இடங்களில் வைத்த 21 குண்டுகள் வெடித்து, 58 பேர்கள் பலியாகினர், ஏராளமானோர் உடல் ஊனமாகியும், உடல் நலம் பாதிப்பிற்கும் உள்ளானார்கள்.

முஸ்லீம் பயங்கரவாதம் ஈவிரக்கமற்றது என்பதும் ஓர் உதாரணம் கோவை தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வாகும். மருத்துவமனை, கடைத் தெரு, பேருந்து நிலையம் என மக்கள் எங்கெல்லாம் கூடுவார்களோ, எங்கு தஞ்சம் அடைவார்களோ அங்கெல்லாம் குண்டு வைத்து கொன்று குவித்தார்கள். கடந்த 19 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இன்னமும் கொங்கு மண்டலத்தில் முஸ்லீம் பயங்கரவாதிகளின் சதி செயல் முற்றிலுமாக ஒழிக்கப்பட வில்லை.
அதைவிட கொடுமையானது, அந்தக் கொடூர கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று ஓட்டு வங்கி அரசியல் நடத்தும் ஜனநாயக விரோதிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள்.

தற்போது தமிழகத்தில் அதிமுகவிற்குள் ஏற்பட்டுள்ள போட்டி அரசியலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முஸ்லீம் அரசியல் கட்சிகள், அமைப்புகள் முனைந்துள்ளன. தலா ஒரு சட்டமன்ற உறுப்பினரை வைத்துள்ள வைத்துள்ள முஸ்லீம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி ஆகிய இந்த இரண்டு கட்சிகள், சசிகலா, ஓ. பன்னீர் செல்வம், இரண்டு பேருக்கும் வைத்த கோரிக்கை, சிறையில் இருக்கும் முஸ்லீம் பயங்கரவாதிகள் எல்லோரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே.

இப்படி கோரிக்கை வைக்கும் முஸ்லீம் கட்சிகளை புரிந்துகொள்ளலாம். ஆனால், கொங்கு மண்டலத்தில் அரசியல் செய்யும் தனியரசு போன்றவர்கள் பதவிக்காக தான் பிறந்த பூமிக்குத் துரோகம் செய்வதை நினைக்கும்போது, இன்றும் எட்டப்பன்கள் தமிழகத்தில் நீடிக்கிறார்களோ எனத் தோன்றுகிறது.

தங்களுக்கு கிடைக்கும் இரண்டு உறுப்பினர் ஆதரவிற்காக குண்டு வைத்த முஸ்லீம் குற்றவாளிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டாலும், அல்லது முஸ்லீம் கட்சியினர் ஆதரவை பெற்றாலும் அதன் பின்புலத்தில் கொலைக்காரர்களுக்குத் துணைபோவதாகத்தான் இருக்கும் என்பதை கொங்கு மண்டல மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நமது உரிமைக்காக்க, பாதுகாப்பை உறுதி செய்ய முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு யார் துணைபோனாலும் அவர்களை புறந்தள்ள முடிவு எடுக்க வேண்டும்.

இப்படிப்பட்ட ஈவிரக்கமற்ற குற்றவாளிகளை தங்கள் பதவிக்காக விடுதலை செய்ய ஏற்றுக்கொண்டால், அந்த சம்பவத்தில் கொடூரமாக கொல்லப்பட்டவர்களின் ஆன்மா இவர்களை மன்னிக்காது. பதவிக்காக இறையாண்மையை தூக்கி எறியும் எவரையும் இறைவனும் தண்டித்தே தீருவான் என எச்சரிக்கிறோம்.

19ஆம் ஆண்டு நினைவு நாளில் அந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்த அந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்த அரசு மனிதாபிமான முறையில் அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. இத்தகைய கொடூர நிகழ்விலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்த பலிதானி நினைவாக நினைவு ஸ்தூபி (தூண்) பிரதான சாலையில் நிறுவப்பட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.