புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பு

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நிதி , உள்துறை , நிர்வாகம், வருவாய் , பொதுப்பணி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளை கவனிப்பார்.

சென்னை:

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை வியாழன் அன்று (பிப். 16) பதவியேற்றது. முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நிதி , உள்துறை , நிர்வாகம், வருவாய் , பொதுப்பணி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளை கவனிப்பார்.

முதல் வரிசையில் சசிகலா சகோதரர் திவாகரன் , தினகரன் , தம்பித்துரை உள்ளிட்டோர் இருந்தனர்.

தான் சேலம் செல்லும் வழியில், இந்தப் பதவி ஏற்பு விழா குறித்த தகவல் வந்ததால், தம்மால் கலந்து கொள்ள இயலவில்லை என்று மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார். எனவே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இதில் பங்கேற்கவில்லை.

பதவியேற்றுக் கொள்பவர்களின் பெயர்களை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பட்டியல் பிரகாரம் வாசித்தார்.

பதவியேற்ற பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள், தினகரன் உள்ளிட்டோர் மெரினாவில் உள்ள ஜெ., மற்றும் எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.