சசிகலாவின் மூன்று கட்டளைகள்: எடப்பாடி கலக்கம்!

இப்படி மூன்று முக்கியக் கட்டளைகளை விதித்து, ஆட்சி நிர்வாகப் பொறுப்பை கொடுத்திருப்பதால், முதல்வராக பதவியேற்ற சந்தோஷத்தைக் காட்டிலும், நிபந்தனைகளை நினைத்து அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை:
முதல்வராகப் பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போது பெங்களூரு சிறையில் இருக்கும் அதிமுகவின் தாற்காலிக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா மூன்று முக்கிய கட்டளைகளைப் பிறப்பித்துள்ளாராம். இதனை தாற்காலிகப் பொதுச் செயலாளரால் நியமிகப்பட்டுள்ள துணைப் பொதுச் செயலாளர் தினகரன், எடப்பாடியின் வலியுறுத்திச் சொன்னதாகக் கூறப்படுகிறது.

சசிகலாவின் முக்கிய மூன்று கட்டளைகள் என தினகரன் கூறியவை:

1. முக்கியமான பொறுப்புகள் அனைத்தையும் உங்களிமே கொடுக்க வேண்டும் என்பதால்தான் சசிகலா இவ்வாறு செய்திருக்கிறார். பொதுச் செயலர், ஆட்சி நிர்வாகத்தை கவனிப்பதற்கு உங்களை நியமித்திருந்தாலும், அதை நீங்கள் மட்டுமே தனித்து செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.

2. ஆட்சி நிர்வாகத்தில் எடுக்க வேண்டிய எந்த முக்கிய முடிவானாலும், என்னிடமும், திவாகரனிடமும், நடராஜனிடமும் தெரிவித்து ஒப்புதல் பெற்றே, அதை செயல்படுத்த அறிவுறுத்தி இருக்கிறார். அதனால், ஆட்சி நிர்வாகத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் மூவரிடமும் அப்டேட் செய்து, மூவரின் வழிகாட்டுதலோடு ஆட்சியை நடத்துங்கள். இதற்கு யார் இடையூறாக இருந்தாலும், அவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

3. நீங்கள் முதல்வராக இருந்தாலும், வாரத்தில் ஒரு நாள், பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சசிகலாவை கட்டாயம் சந்தித்தாக வேண்டும். ஆட்சி நிர்வாகத்தில் நடக்கும் அத்தனை முக்கிய விஷயங்களையும் அவரிடமும் சொல்லி, ஒப்புதல் பெற வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.

இப்படி மூன்று முக்கியக் கட்டளைகளை விதித்து, ஆட்சி நிர்வாகப் பொறுப்பை கொடுத்திருப்பதால், முதல்வராக பதவியேற்ற சந்தோஷத்தைக் காட்டிலும், நிபந்தனைகளை நினைத்து அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.