குற்றவாளியிடம் பகிரப்படும் அரசு ரகசியங்கள்: ஜெ., சசி., என்ன வேறுபாடு?

எந்த வகையிலும் தொடர்பே இல்லாத ஒருவர், திடீரென முறைகேடாக ஒரு கட்சியைக் கைப்பற்றி, தன் குடும்பத்தாரை அதற்குள் அமர்த்தி, கட்சியிலும் தன் பினாமி, தன் குடும்ப உறுப்பினர்னு கொண்டாந்துவிடுவதை, தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கக் கூடாது!

@SenkottaiSriram #OPSvsEPS #SasikalaConvicted
அரசு ரகசியங்கள் ஒரு குற்றவாளியிடம் பகிரப்படுமென்றால் ஆட்சி கலைக்கப்படுவதே நல்லது – என்று எழுதியிருந்ததற்கு ஓரிருவர் கொடுத்த எதிர்க் கருத்தில்…

ஜெ. சிறையில் இருந்த போது பன்னீரும் அப்படித்தானே! அப்போ எங்கே போச்சு இந்த அறிவுரைன்னு கேட்டிருந்தாங்க… //சப்ப,ஜெயா ஜெயில்ல இருக்க சொல்ல பன்னீர் இருந்தான்,அப்ப ஏன்டா நாயே இத கேக்கல..எச்சநாய// என்று கேட்டிருந்தார் ஒருவர்.

அப்பவும் அதையே தான் சொன்னேன்…

ஆனா ஒரு வித்தியாசம்…

ஜெயலலிதா முதலமைச்சரா இருந்தாங்க. மக்கள் ஆதரவு கொடுத்து முதலமைச்சர் ஆக்கி…யிருந்தாங்க! அவங்க பேர்ல கீழ் நீதிமன்றத்துல தீர்ப்பு வந்ததுல அவங்க சிறைக்குப் போனாங்க… அப்போ, இது எதிர்க்கட்சியினரின் சதின்னு சொல்லி மக்களை நம்ப வச்சாங்க. தன் பினாமியா பன்னீரை வெச்சிருந்து, தான் திரும்பும்போது ஆட்சியை மீண்டும் கொடுத்துடனும்னு ஒப்பந்தம் போட்டு உள்ள போனாங்க. அவங்க உள்ளே போகுறதுக்கு முன்னாடியும், அரசு அவங்க கட்டுப் பாட்டுல இருந்தது. அரசு ரகசியங்கள காப்பாத்துவேன்னு பதவிப் பிரமாணம் எடுத்தப்போ உறுதி கொடுத்து, சட்டத்துக்குக் கட்டுப் படுவதாய் சொல்லியிருந்தாங்க…
அவங்க மீண்டும் வந்து, மேல் கோர்ட் அப்பீல் ஆகி… அது ரொம்ப நாளா இழுத்தடிச்சி… இதெல்லாம் தெரிஞ்ச கதை!

சொல்ல வரும் விஷயம் இன்னான்னா….

சசிகலா ஒரு கவுன்சிலர் கூட ஆகாதவங்க, அரசு, ஆட்சிப் பொறுப்புன்னா இன்னான்னே தெரியாதவங்க…ஒரு கொள்ளைக் கூட்டத்தலைவி மாதிரின்னு பொதுமக்கள் நம்புறாங்க! அவங்க செயல்பாடு அப்படி இருந்தது…

ஒரு பூலான் தேவி மாதிரியான கொள்ளைக்காரி, சட்டமன்ற உறுப்பினர்களை பயம்காட்டி, அல்லது பிளாக்மெயில் செஞ்சி, குடும்பத்தாரை அடைச்சு வெச்சி, வற்புறுத்தி எனக்கு ஓட்டு போடணும்னு திடீர்னு முதலமைச்சர் வேட்பாளரா நின்னு, ஜெயிச்சி முதலமைச்சர் ஆனா… அது ஜனநாயகத்துல சேருமா? அதுக்கு பேரு ஜனநாயகமா?

இந்த முன்னுதாரணம் இருந்தா… பாகிஸ்தான் பயங்கரவாதிகளே கூட எம்.எல்.ஏஸ்ஸை கடத்தி வெச்சி, பயம் காட்டி, திடீர்னு ஒரு பயங்கரவாதியையே கூட தங்கள் சட்டமன்றக் குழு தலைவனா முன்னிறுத்தி, ஒரு காஷ்மீர் சட்டமன்றத்தையோ, பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்கம் போன்ற சட்டமன்றங்களையோ கைப்பற்ற முடியும்…!

இதைத்தான் … உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் பினாமியை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவது தவறான முன்னுதாரணம், ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்திச் சொன்னது!
எந்த வகையிலும் தொடர்பே இல்லாத ஒருவர், திடீரென முறைகேடாக ஒரு கட்சியைக் கைப்பற்றி, தன் குடும்பத்தாரை அதற்குள் அமர்த்தி, கட்சியிலும் தன் பினாமி, தன் குடும்ப உறுப்பினர்னு கொண்டாந்துவிடுவதை, தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கக் கூடாது!

முறையாக கட்சிக்காரர்களின் நம்பிக்கை பெற்று, அவர்கள் ஆதரவில் தேர்வாகி, தலைமைப் பொறுப்புக்கு வந்து, தேர்தலில் நின்று மக்களால் மன்னிக்கப்பட்டோ, மறக்கப்பட்டோ ஏதோ ஒன்று.. அப்படியாக வந்து முதல்வர் நாற்காலியில் அல்லது பினாமியை அமர்த்திவிட்டுச் செல்லலாம்…!

அது அல்லாத வரை…

ஒரு நாளும் இந்த ஜனநாயக விரோத அரசு தொடர அனுமதிக்கக் கூடாது!
நேர்மையாளர்கள் சிந்திக்கட்டும்!