October 24, 2021, 2:19 am
More

  ARTICLE - SECTIONS

  மாறாத முஸ்லிம் மனோபாவம்! ஏன் இந்த குரூர புத்தி?!

  இஸ்லாமியர் மோடி வெறுப்பு என்று நிலையில் மிக மிக கீழ்த்தரமான கூட்டத்தைப் பேசவிட்டு சந்தோசமாக ரசிப்பது நிச்சயம் மத நல்லிணக்கத்தைச் சிதைக்கும்.

  nellai kannan speech - 1

  இஸ்லாமியர்கள் மோடி அமித்ஷா இருவரையும் கதையை முடித்துவிடுவார்கள் என்று நினைத்தேன் ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறீர்? சீக்கிரம் முடிங்கப்பா. என்று நெல்லை கண்ணன் முஸ்லிம்கள் அமர்ந்திருக்கும் மேடையில் பேச அதை ரசித்து மனம் விட்டுச் சிரித்து ரசிக்கிறார்கள். ஆனால் ஒரு முஸ்லீம் கூட அங்கே இப்படிப் பேசுவது தவறு என்று சொல்லவில்லை!

  இஸ்லாமியர் மோடி வெறுப்பு என்று நிலையில் மிக மிக கீழ்த்தரமான கூட்டத்தைப் பேசவிட்டு சந்தோசமாக ரசிப்பது நிச்சயம் மத நல்லிணக்கத்தைச் சிதைக்கும்.

  இந்தியப் பிரதமரைக் கொலை செய்ய தூண்டும் பேச்சிற்கு நெல்லை கண்ணன் மீது தமிழகக் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  ***

  பட்டப்பகலில் வெட்டவெளியில் என்னே ஒரு அறைகூவல்.
  மாற்று கட்சியினரும், ஊடகங்களும் ஒரு சிறுகண்டனம் இல்லாது கைகொட்டி இந்த வன்முறையை ஆதரிப்பது என்ன விதமான அரசியலோ? சட்டரீதியாக @BJP4TamilNadu வழக்கு பதிவுசெய்யும். @CMOTamilNadu இரும்புக்கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  ***

  Saravana Kumar :

  நெல்லை கண்ணன் மீது புகார் கொடுத்துவிட்டோம் என்று தமிழக பாஜக பிரமுகர்கள் ஆளாளுக்கு பதிவிட்டுவிட்டார்கள்…

  அத்தோடு அவர்கள் கடமை முடிந்தது…நாமும் இதற்குமேல் என்ன செய்ய முடியும் என்று கடந்துசென்று விடுகிறோம்.. இதற்கு முன் வைரமுத்து , எஸ்ரா சற்குணம் , மோகன் லாசரஸ் , சீமான் போன்ற பலர் மீதும் இப்படித்தான் புகார் கொடுத்தார்கள்… அப்புறம் என்ன நடந்தது?

  தமிழக போலீசும் கடமைக்கு ஒரு வழக்குப் பதிவு செய்யும்… குற்றம்சாட்டப்பட்டவர்கள் கொஞ்சநாள் தலைமறைவாக இருப்பார்கள்… அதற்குள் ஏதாவது ஒரு நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கும்… மீண்டும் வந்து ஒவ்வொரு மேடையிலும் முன்னைவிட கேவலமாக பேசிக்கொண்டு திரிகிறார்கள்…

  இதற்கு முன் கொடுத்த புகார்களில் மேல் நடவடிக்கை என்ன ஆயிற்று ? ஏன் அவர்கள் மீது உருப்படியான எந்த நடவடிக்கையும் இல்லை ? என்று பாலோ செய்யலாம்… குறைந்தபட்சம் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்து இதை குறித்து கேள்வி கேட்டு இருந்தாலோ அல்லது மத்திய அரசிலிருந்து மாநில உள்துறைக்கு இதைப்பற்றி ஒரு நோட் வந்து இருந்தாலோ கொஞ்சமாவது ஏதாவது பிரயோஜனம் இருந்திருக்கும்….

  திமுகவும் அதிமுகவும் நான் அடிப்பது போல் அடிக்கிறேன் …நீ அழுவது போல் அழு என்று நாடகமாடுகிறார்கள் ….இப்போதுகூடப் பாருங்கள்… ஒரு பிரதமரை வெட்டுவேன் என்றும் உள்துறை அமைச்சரை கொல்வேன்… ராணுவம் என் மயிருக்குச் சமம் ..என்றெல்லாம் பேசியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டு கோலம் போட்டவர்களை கைது செய்து இப்போது திமுகவுக்கு கோலப் போராட்டம் என்ற புதிய போராட்ட உத்தியை வழங்கியிருக்கிறது மாநில அரசு….

  இதுதான்… இந்த கள்ளத்தொடர்பை , இந்த திருட்டு வேலையை புரிந்துகொண்டு அதற்கேற்ப தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளாத வரை தமிழகத்தில் பாஜக தொடர்ந்து நோட்டாவோடுதான் போட்டி போட்டுக் கொண்டிருக்க வேண்டும்…

  ***

  இது போன்ற கருத்துகள், நெல்லை கண்ணன் பேச்சைக் கேட்டு ரசித்து கைத்தட்டும் எஸ்டிபிஐ., கட்சியின் முஸ்லிம்களைக் கண்டு கொதித்துப் போய், சமூகத் தளங்களில் கேள்விகளை முன்வைக்கிறார்கள். இவர்களின் செயலால், சமூக நல்லிணக்கம் என்ற ஒன்று தேவை எனக் கருதினால், அது இப்போது கெட்டுப் போகும் என்பது தெரியாதா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

  சமூக விரோதியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ள பன்ருட்டி வேல்முருகன் போன்றோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத வரை, தமிழக அரசு கோழைத்தனமான கையாலாகாத அரசாகத்தான் வரலாற்றில் பதிவு செய்யப் படும்!

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  368FollowersFollow
  39FollowersFollow
  74FollowersFollow
  1,585FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-