Home உள்ளூர் செய்திகள் இந்தியர் என்று சொல்ல எனக்கு விருப்பம் இல்லை: எம்.பி., திருமாவளவன் தேசவிரோதப் பேச்சு!

இந்தியர் என்று சொல்ல எனக்கு விருப்பம் இல்லை: எம்.பி., திருமாவளவன் தேசவிரோதப் பேச்சு!

thol thiruma

சென்னையில் நடந்த ஓர் புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்திய தேசியத்தை மறுக்கும் மொழிப் பிரிவினைவாதிகள் சிலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், இந்திய தேசியத்துக்கு ஊறு விளைவிக்க மாட்டேன் என்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய தேசியத்தை மறுத்துப் பேசினார். இதை அடுத்து, அவரது எம்பி., பதவி பறிக்கப் பட வேண்டும் என்ற குரல்கள் எழத் தொடங்கியிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், “தமிழ் தேசிய கோட்பாட்டில் நமக்கு எவ்வித மாறுபாடும் இருக்காது. ஆனால், அதை அடைய வேண்டிய வழியில் மாற்றுக் கருத்து இருக்கலாம். தமிழ் மகன்தான் தமிழ் நிலத்தை ஆள வேண்டும் என்பதிலும், தமிழர்களின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், வாக்கு வங்கி அரசியலில் நாம் எப்படிப்பட்ட நிலையில் உள்ளோம். தமிழக அளவில் தி.மு.க-வையும் அதி.மு.க-வையும் தூக்கி எறியும் சக்தியை நாம் பெற்றிருக்கிறோமா?

தமிழ் தேசியத்திற்கு எதிராக சனாதனம் நிற்கிறது. இந்திய அளவில் மாபெரும் வலிமையை சனாதனக் கோட்பாடு பெற்றிருக்கிறது. நாம் சனாதனத்துக்கு எதிராக நிற்கப் போகிறோமா அல்லது அம்பேத்காரியம் மற்றும் பெரியாரியத்துக்கு எதிராக நிற்கப் போகிறோமா என்பதுதான் கேள்வி.

தேசிய அளவில் வலிமை பெற்றிருக்கும் கட்சிகள் இரண்டு. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஒன்று ஜனநாயக சக்தி, இன்னொன்று சனாதன சக்தி.

ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் காங்கிரஸால்தான் பாஜக.,வை வீழ்த்த முடியும் என்கிற தெளிவு வேண்டும். நாம் வாக்கு வங்கி அரசியலில் தன்னிறைவு பெறும் வரை நெளிவு சுளிவுகளோடுதான் அரசியல் உத்திகளை வகுக்க வேண்டும்.

நாம் இந்தியர் என்ற சொல்லிக்கொள்வதில் நாட்டம் இல்லை. ஆனால், நாம் இந்தியரே இல்லை என்ற அமித்ஷா நிறுவப் பார்க்கிறார். அப்படி இருக்கையில் தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய தேவை உள்ளது என்றார் திருமாவளவன்.

நாம் இந்தியர் இல்லை என்று அமித் ஷா எப்போது நிறுவப் பார்த்தார், எப்படி நிறுவப் பார்த்தார் என்பதற்கெல்லாம் எந்த பதிலும் திருமாவளவனிடம் இல்லை! குருட்டாம் போக்கில் எதையாவது சொல்லி, கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்பதே திருமாவளவனனின் உள்நோக்கம் என்பது இதில் தெளிவாகிறது.

அனைவரும் இந்தியரே என்ற எண்ணத்தில் தான் தேசிய குடியுரிமை பதிவு நடைமுறைப் படுத்தப் படுகிறது. அது தனக்கு இல்லாமல் போகும் என்ற பயம் திருமாவளவனுக்கு வந்திருக்கிறது என்றால், நிச்சயம் திருமாவளவன் ஒரு பாகிஸ்தானியாகவோ அல்லது வங்கதேசத்தைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும்! அப்படிப்பட்ட நபர் எதற்காக, இந்திய தேசியத்தில் உள்ள ஒரு தொகுதியில் பொய்யாக வாக்கு கொடுத்து சிதம்பரம் தீட்சிதர் கால்களில் விழுந்து கோயிலில் மரியாதை கொடுங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடியோ, அல்லது உருட்டி மிரட்டியோ ஓட்டு வாங்கி வெற்றி பெற வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

நியாயம் நேர்மை நீதி இவற்றில் நம்பிக்கை இருக்குமானால், திருமாவளவன் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு, தனக்கு இந்திய தேசியத்தில் நம்பிக்கை இல்லை என்று இவ்வாறு கூட்டங்களில் பேசட்டும்!

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version