Home சினிமா சினி நியூஸ் ஒன்றா.. ரெண்டா.. ஆயிரம்! நீட்டித்துக் கொண்டே வரும் வைரமுத்துவின் கவலைகள்! சிறப்பு செய்த ‘டிவிட்டர் கவிஞர்கள்’!

ஒன்றா.. ரெண்டா.. ஆயிரம்! நீட்டித்துக் கொண்டே வரும் வைரமுத்துவின் கவலைகள்! சிறப்பு செய்த ‘டிவிட்டர் கவிஞர்கள்’!

Vairamuthu 1

சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு இப்போது கவலைகள் நீட்டித்துக் கொண்டே வருகின்றன. தன் கவலைகளைப் பட்டியலிட்டு டிவிட்டர் பக்கத்திலும் பொருமித் தீர்த்துவருகிறார்.

ஒன்றா.. ரெண்டா… ஆயிரம்… அதை நான் சொல்லவே… ஓர் நாள் போதுமா? என்று பாடலையும் டப் செய்து எழுதிவிட்டார். அந்த ஒன்று ரெண்டு ஆயிரம் என நீண்டவை ஏதோ கனவுகள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் சுதந்திரம். ஆனால் சினிமா பாடலாசிரியருக்கோ… நீண்டு கொண்டே வருபவை இயலாமையினால் ஏற்பட்டு விட்ட கவலைகள்!

அப்படி என்ன கவலை என்கிறீர்களா? மார்கழி மாசத்துக் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் கிழவனின் போர்வைக்குள் கதகதப்பை ஏற்படுத்த பழைய கனவுகளில் மூழ்கிப் போகும் நிலையில், இப்போது கனவுகள் மனத்தை அரிக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் இந்தப் பினாத்தல்!

மலேசியப் பாராட்டும் டாக்டர் பட்டமும் கனவுகளாய் கசிந்து கொண்டிருப்பதில் நனவுகள் மட்டும் இப்போது நனைந்து கொண்டு கவலைகளாய் அரித்துக் கொண்டிருக்கின்றன!

சினிமா பாடலாசிரியர் வைரமுத்து தனது டிவிட்டர் பதிவில் திடீரென ஒரு கவலையை வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாக நீட்சியாக கண்டிப்புடன் வெளியிட்டிருக்கும் கவலைதான் இது….

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப் பட்டிருந்த உச்சகட்டப் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது கவலையளிக்கிறது. ஒரு சமூகப் போராளிக்குச் சரியான பாதுகாப்பு வேண்டாமா? துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கும் இதே கவலையை நீட்டிக்கிறேன்; கண்டிக்கிறேன்.

டிவிட்டர் வாசிகளின் அண்மைக்கால சோர்வுக்கு சோறூட்டியிருக்கும் வைரமுத்துவின் இந்த வைரவரிகளுக்கு பரம வைரிகளாய் வரிந்து கட்டிக் கொண்டு கருத்துக் கணைகளைப் பொழிந்து வருகிறார்கள் சிலர்!

பெயருக்கு ஏற்ப வேடிக்கையாய் ஒருவர் போட்டுள்ள கருத்து வாடிக்கையாய் எழுதும் உ.பி.,ஸ்களின் லெவலுக்கு ஒரு சினிமா பாடலாசிரியரை தரம் உயர்த்தி ஷொட்டு கொட்டியிருப்பது போல் படுகிறது. அது…

குறிப்பாக, பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழகத்தைப் பாதுகாக்க வேண்டிய மிக மிக மோசமான கால கட்டத்தில் மாநிலம் இருக்கும்போது, பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு, பாகிஸ்தானின் குரலை தமிழகத்தில் ஒலித்துக் கொண்டு, அப்பாவிகளை பயங்கரவாதிகளின் சதித்திட்டங்களுக்கு பலிகடா ஆக்கிக் கொண்டிருக்கும் திமுக.,வின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஊடகத் தளத்தில் செயல்வீரராக ஊழியம் செய்து கொண்டிருக்கும் வைரமுத்து போன்றவர்கள், யாரிடம் இருந்து இவர்களுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது என்று கதறுகிறார்கள் என கேள்விகள் முன்வைக்கப் படுகின்றன.

சமூகத்துக்கு போராடும் போராளிக்கு சமூகமே பாதுகாப்பு அரணாக இருக்கும் என்று அறைகூவல் விடுவது, இப்ப காவல்துறை பாதுகாப்பை கேட்பதில் , உங்களுக்கு சமூகத்தின் மீது நம்பிக்கையில்லையா ?

யார்சமூக போராளி ஸ்டாலினா? மதத்தால் மக்களை பிரிப்பவரா? கிருஸ்தவ இஸ்லாமிய விஷேசங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வது இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது இது மக்களின் உணர்வுகளை பிடிக்காதா இதற்கு பெயர்தான் சமூக போராளியா

அது என்ன சமூக போராளி? இதை அவனே ஏற்றுக்கொள்ள மாட்டானே. வயிறு, ஒரு மனிதனை எப்படி எல்லாம் பேச வைக்கிறது.

சமூக போராளியா அடடே.????
தட்டுங்கள் கவிதையை நம் கற்பனையில்!
நாடு தோறும் கோஷம் போட்டு
வீடுதோறும் கோலமிட்டு!
தப்பு தாளம் போட வைத்து
பப்பு உடன் மேடையில் நின்று!
துண்டு சீட்டை கையில் எடுத்து!
வண்டு முருகன் வார்த்தைகளில்!
வான் புகழ் வீரன் என் தளபதியின் பாதுகாப்பில் ஏன் இந்த அலட்சியம்!!

சர்வாதிகாரிக்கு எதுக்கு டா, பாதுகாப்பு. சர்வாதிகாரிக்கு பாதுகாப்பு கொடுக்கும் அளவுக்கு ,இது என்ன தீவிரவாத நாடா.

அவர்தார் தான் சர்வாதிகாரியாச்சே…அவரிடம் இருந்துதான் தமிழ்நாட்டுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது

https://twitter.com/cibirajarajan/status/1215568410731597824

இதெல்லாம் ரொம்ப ஓவர்.நாட்டுக்கு சேவையாற்ற வேண்டிய பாதுகாப்பு படையினரை இது மாதிரி வீண் செயல்களுக்கு பயன்படுத்துவது தவறு.

உனக்கே இங்க மரியாத இல்ல ஓன் தொலைவனுக்கு வேற

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version