Home சற்றுமுன் ‘சசிகலா’ மட்டுமில்ல..! திமுக., காங்கிரஸுக்கு புத்தி சொன்ன ‘தர்பார்’ ரஜினி!

‘சசிகலா’ மட்டுமில்ல..! திமுக., காங்கிரஸுக்கு புத்தி சொன்ன ‘தர்பார்’ ரஜினி!

rajini

அண்மையில் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. இதற்கு காங்கிரஸ், திமுக., திரிணமுல் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, இந்தச் சட்டம் குறித்த தவறான பிரசாரத்தை மக்களிடம் கொண்டு சென்றன. ஊடகத்தினர் மைக் நீட்டிய இடத்தில் எல்லாம் இவர்கள் இந்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று பிரசாரம் செய்தனர்.

அதை அப்படியே எடுத்து கொண்டு, முஸ்லிம் பயங்கரவாத இயக்கங்களின் தூண்டுதலில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அங்கங்கே போராட்டம் வன்முறை என ஈடுபட்டனர். ஆனால் மத்திய அரசு இந்தச் சட்டத்தின் மூலம் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்போ, பிரச்னையோ வராது என்றும், இது முழுக்க முழுக்க நாட்டுக்குள் திருட்டுத்தனமாக வரும் பாகிஸ்தான், வங்கதேச, ஆப்கன் முஸ்லிம்களைப் பற்றியது என்றும் கூறிய போதும், அதனை ஏற்காமல் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே, வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய ரோஹிங்க்யா முஸ்லிம்களால் முஸ்லிம்களே படும் சிரமத்தை எடுத்துச் சொன்ன போதும், முஸ்லிம் என்ற மத கண்ணோட்டத்தில், ரோஹிங்க்யாக்களையும் இந்தியாவில் குடியுரிமை தந்து அனுமதிக்கவேண்டும் என்று கூக்குரல் எழுப்பினர்.

இந்நிலையில், இவ்வாறு சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவும் நபர்களால் என்ன மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை தனது படத்தில் ஒரு காட்சியாக வைத்து புரியவைத்து விட்டார் என்று கூறுகின்றனர் சமூக வலைத் தளங்களில்!

சசிகலா சிறைக்காட்சிகள் குறித்த வசனம் இருப்பதால் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு மிரட்டல் விடுக்கப் பட்டிருப்பதாக புகார் அளிக்கப் பட்டிருக்கிறது. இதை அடுத்து சசிகலா குறித்த வசனங்கள் நீக்கப் படும் என்று கூறியிருக்கிறது லைகா நிறுவனம்.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மக்களுக்கு தர்பார் புரியவைத்துள்ளது என்கிறார்கள்.

படத்தில் வேலிகளை உடைத்து சட்டவிரோதமாக பங்களாதேஷ் அசாம் வழியாக சமூக விரோதிகள் (சுனீல்ஷெட்டி) உள்ளே வந்த மாதிரி ஒரு காட்சி இருக்கிறது . இதன் மூல்யமாக CAA எதற்கு தேவை என்று தெளிவாக மக்களுக்கு ரஜினிகாந்தும் முருகதாஸும் புரிய வைத்து விட்டார்கள்.

https://twitter.com/thespectre616/status/1215589726985392128

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version