spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஇடஒதுக்கீடு வரலாறை நினைத்து... காங்கிரஸுடனான உறவை விசிக., மறுபரிசீலனை செய்யுமா?

இடஒதுக்கீடு வரலாறை நினைத்து… காங்கிரஸுடனான உறவை விசிக., மறுபரிசீலனை செய்யுமா?

- Advertisement -
thirumavalavan stalin

தலித்களுக்கான இட ஒதுக்கீடும் காங்கிரசும்!

அரசுப் பணிகளில் உள்ள பட்டியலினத்தவரின் பதவி உயர்வில் மாநில அரசுகள் இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல, மாநில அரசுகள் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவற்றை நீதிமன்றம் ஆணையிடமுடியாது என்று உச்சநீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பளித்திருக்கிறது.

இதற்குக் காரணம் உத்ரகண்டில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி பிறப்பித்த ஆணைதான். அதைக் குறித்த வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் இப்படித் தீர்ப்பளித்துள்ளது.

இந்த நேரத்தில் இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த இன்னொரு தீர்ப்பு நினைவுக்கு வருகிறது. 2018ல் அப்போது கர்நாடகத்தை ஆண்ட ஜ.த (ம)- காங்கிரஸ் அரசு 5000 பட்டியிலனத்தவவரைப் பதவியிறக்கம் செய்து அந்த இடத்தில் பொதுப்பிரிவினரை நியமித்தது. இது தொடர்பான வழக்கில் 2018 செப்டம்பர் 26 அன்று உச்சநீதிமன்றம் பதவி உயர்வில் பட்டியலினத்தவ்ருக்கு (SC15% ST3%) இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்ப்ளித்தது. இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் (பாஜக அரசு) வாதிட்ட அட்டார்னி ஜெனரல் கே கே வேணுகோபால் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்று வாதிட்டார்.

இன்னொன்றும் சொல்ல வேண்டும். இந்திரா சஹானி வழக்கின் காரணமாக பட்டியலினத்தவரின் பதவி உயர்வுக்கு ஆபத்து ஏற்பட்ட போது அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி அவர்களுக்கு பாதுகாப்பளித்தவர் அன்றைய பிரதமர் வாஜ்பாய். அத்தோடு நிரப்பப்படாமல் இருந்த காலி இடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.

காங்கிரஸ் நீண்ட காலம் ஆட்சியிலிருந்த போதும் அம்பேத்கருக்கு பாரதரத்தினா வழங்கவில்லை. அதன் கூட்டணிக்கட்சித் தலைவரான எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட போதும் அம்பேத்கருக்கு அது வழங்காமல் தவிர்த்து வந்தது. அவருக்கு பாரத ரத்தினா வழங்கி கெளரவித்தது வாஜ்பாய் அரசுதான்

சட்டமியற்றும் மன்றங்களில் (சட்டமன்றம், நாடாளுமன்றம்) பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்று சட்டம் இயற்றியது மோதியின் அரசு

அம்பேத்கரின் உரைகளையும் எழுத்துக்களையும் ஆராய்வதற்காக தில்லியில் 15, ஜன்பத்தில், சர்வதேசத் தரத்தில் நவீன தொழில் நுடபத்துடன் கூடிய State of art ஆய்வு மையம் (Dr. Ambedkar International center) அமைத்ததும் மோதி அரசுதான்

லண்டனில் அம்பேத்கர் வசித்த வீட்டை மூன்று மில்லியன் பவுண்டு கொடுத்து வாங்கி நினைவகம் அமைத்தது மகராஷ்டிரத்தை ஆண்ட பாஜக அரசு.

போனதெல்லாம் போகட்டும் . இனியாவது பட்டியலினத்தவரின் நலம் நாடுவதாகச் சொல்லும் விசிக போன்ற கட்சிகள் பதவி உயர்வில் இடஒதுக்கீடு விஷ்யத்தில் காங்கிரஸ் நடந்து கொண்ட வரலாற்றை நினைத்துப் பார்த்து அதனுடனான உறவை மறுபரிசீலனை செய்யுமா?

  • மாலன் நாராயணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe