ஆவின் பால் வளர்ச்சியை தடுக்கும் தனியார் பால் கம்பெனி: பால் முகவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

01-04-15 tamilnadu milk news photo 01சென்னை பேரூர் நாடார் சங்கத்திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கம், (ஆவின் மற்றும் தனியார் பால் முகவர்கள் கூட்டமைப்பு) மாநில தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி செய்தியாளர்களை சந்தித்தார்., அப்போது., இந்திய பால்வளத்தையும், ஆவின் நிறுவனத்தையும் காத்திடவும், Let Groupe Lactalis Thirumala நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்… மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக உலக பால் உற்பத்தியில் முதலிடத்திலும், உலகின் ஒட்டு மொத்த பால் உற்பத்தியில் 17% யும் வைத்துள்ள நமது இந்திய பால் வளத்தை குறி வைத்து பன்னாட்டு நிறுவனங்கள் படையெடுக்க தொடங்கியுள்ளன. அதன் முதற்கட்டமாக அண்டை மாநிலமான ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் “திருமலா பால்” நிறுவனத்தின் 26% பங்குகளை Carlyle Growth Capital Fund. எனும் நிறுவனம் சுமார் 650 கோடிக்கும், மீதமுள்ள 74% பங்குகளை உலகின் முன்னணி பால் பொருட்கள் நிறுவனமான Le Groupe Lactalis எனும் பன்னாட்டு நிறுவனம் சுமார் 1750 கோடி கொடுத்தும் கடந்த 2014ம் ஆண்டு வாங்கின. பொதுமக்கள் நலன் மீது சற்றும் அக்கறை இல்லாமல் கடந்த ஆண்டில் மட்டும் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 12.00 ரூபாய் வரை உயர்த்திய பன்னாட்டு நிறுவனமான Le Groupe Lactalis திருமலா பால் நிறுவனம் 3.00% கொழுப்பு சத்தும், 8.5% திட்டம் சத்தும் உள்ள Toned Milk போலே Speciale Toned Milk எனும் புதிய வகை பாலினை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் ஒரே அளவான 3.00% கொழுப்பு சத்தும், 8.5% திட சத்தும் உள்ள பழைய வகை Toned Milkஐ (MRP 44.00) விட புதிய வகையான Speciale Toned Milk (MRP 36.00) லிட்டருக்கு 8.00 ரூபாய் குறைவாக நிர்ணயம் செய்துள்ளது. ஒரே வகுப்பில் பாலில் பெயரில் மட்டும் சிறு மாற்றம் செய்து விட்டு புதிய பெயரில் அறிமுகம் செய்து விற்பனை விலையை லிட்டருக்கு 8.00 ரூபாய் குறைவாக நிர்ணயம் செய்துள்ளதற்கு காரணம் “ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறது” எனும் பழமொழியைத் தான் நமக்கு ஞாபகப்படுத்துகிறது. கடந்த ஆண்டில் மட்டும் பால் விலையை லிட்டருக்கு 12.00 ரூபாய் வரை உயர்த்திய அதே பன்னாட்டு பால் நிறுவனமான Le Groupe Lactalis திருமலா பால் நிறுவனம் பழைய வகை பாலிற்கு விற்பனை விலையை குறைக்காமல் தற்போது பொதுமக்கள் நலன் மீது அக்கறை இருப்பதாக இரட்டை வேடம் போடுவதற்கு எங்களது “தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கம்” கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. கடந்த 2014ம் ஆண்டு தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிய பிறகு பெரும்பாலான தமிழக விவசாயிகள் தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் ஊற்றுவதை குறைத்துக் கொண்டு ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றத் தொடங்கியதின் விளைவாக ஆவின் நிறுவனத்திற்கு பால் வரத்து அதிகரித்துள்ளதுடன் ஆவின் பால் விற்பனையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. தற்போது ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாத பன்னாட்டு பால் நிறுவனமான Le Groupe Lactalis திருமலா பால் நிறுவனம் ஆவின் பால் விற்பனையை குறைத்துக் கொண்டு தங்களது Speciale Toned Milk வகை பாலினை கட்டாயம் கொள்முதல் செய்து விற்பனையை அதிகரிக்க வேண்டும் எனவும், அவ்வாறு அப்பாலினை கொள்முதல் செய்து விற்பனையை அதிகரிக்காத பால் முகவர்களுக்கு அருகில் புதிய பால் முகவர்களை நியமனம் செய்யப் போவதாகவும், பழைய பால் முகவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் எனவும் மிரட்டி எச்சரிக்கை செய்து வருகிறது. ஒரே வகையான பாலிற்கு இரட்டை விலை நிர்ணயம் செய்திருப்பதுடன், ஆவின் பால் விற்பனையை குறைக்கச் சொல்லி பால் முகவர்களை அந்நிறுவனம் மிரட்டி வருவது பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் இந்திய குளிர்பான நிறுவனங்களை அழித்ததைப் போன்று இந்திய பால் நிறுவனங்களையும் அழிக்க இந்த பன்னாட்டு பால் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதோ எனும் பெருத்த சந்தேகத்தை எங்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.01-04-15 tamilnadu milk news photo 02 எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு பன்னாட்டு நிறுவனமான Le Groupe Lactalis திருமலா பால் நிறுவனத்தின் அடாவடி, அராஜகப் போக்கினை உடனடியாக தடுத்து நிறுத்திடவும், ஆவின் நிறுவனத்தை பாதுகாத்திட பால் முகவர்களுக்கு உரிய தொழில் பாதுகாப்பு வழங்குவதோடு, ஆவின் நிறுவனத்தில் இன்னும் தொடர்ந்து வரும் இடைத்தரகர்கள் முறையை முற்றிலும் நீக்கி விட்டு பால் முகவர்களுக்கு நேரிடையான வர்த்தக தொடர்புகளை வழங்கிட வேண்டும் எனவும் எங்களது “தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கம்” சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும்,  தமிழக பால்வளத்துறை அமைச்சர் அவர்களையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். மேலும் பால் முகவர்களை தொடர்ந்து மிரட்டி வரும் பன்னாட்டு நிறுவனமான Le Groupe Lactalis திருமலா பால் நிறுவனம் உடனடியாக தனது மிரட்டல் போக்கினை கை விட வேண்டும் எனவும் அவ்வாறு கை விடாதபட்சத்தில் சென்னையில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன்பு வரும் 08.04.2015 புதன்கிழமை அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பது எனவும் முடிவு செய்திருக்கிறோம்.