Home சற்றுமுன் குஷ்பு ப்ரொபைல் கலர் மாறிடுச்சே… என்னவா இருக்கும்? பாஜக., அழைப்பை காதுல வாங்கிட்டாரோ?!

குஷ்பு ப்ரொபைல் கலர் மாறிடுச்சே… என்னவா இருக்கும்? பாஜக., அழைப்பை காதுல வாங்கிட்டாரோ?!

kushpoo
kushpoo

காங்கிரஸ் மகளிர் அணியின் முக்கிய தலைவர் குஷ்பு தனது ட்விட்டர் ப்ரொபைல் படத்தை வேறு கலரில் மாற்றியிருப்பது தற்போது பலரின் புருவங்களை ஆச்சரியத்தில் உயர்த்தி உள்ளது இதற்கு காரணம் குஷ்பூ பாஜகவுக்கு வரவேண்டும் என்று பலர் அவருக்கு வேண்டுகோள் விடுத்தது தான்

காங்கிரசில்  இருந்துகொண்டு குஷ்புவின் உழைப்பு வீணாகாமல் இருக்க, பாஜக.,வில் அவர் இணைய வேண்டும் என தமிழக பாஜக., நிர்வாகிகள் அவருக்கு  அழைப்பு விடுத்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சச்சின் பைலட்டை நியமித்திருக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ராகுலுக்கு எதிராக எழுந்த கருத்துக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆதரவு தெரிவித்தார். இதனால் குஷ்புவுக்கு எதிராக தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மௌலானா உள்ளிட்ட நிர்வாகிகள் கடும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

kushpoo

தமிழக பாஜக, செயற்குழு உறுப்பினர் சௌமியா மணி தன் டுவிட்டர் பக்கத்தில் ராகுல் தலைமையை நீங்கள் விரும்பவில்லை என்பதை முன்கூட்டியே உணர்ந்ததால் தான் பாஜக.,வில் குஷ்பு இணைய இருக்கிறார் என்ற, செய்தி பரவியது போலும். இனியும் தாமதிக்காமல் பாஜக,வில் சேர்ந்து விடுங்கள் என கூறியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியில் தற்போது பலரும் ராகுல் தலைமைக்கு எதிரான மனோபாவத்தை கொண்டுள்ளனர் குறிப்பாக இந்திராகாந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் தலைவர் ஆவதற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர் முன்னதாக நரசிம்மராவ் நூற்றாண்டு தற்போது கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது உழைப்பையும் திறமையையும் காங்கிரஸ்காரர்கள் சிலர் நினைவுகூர்ந்து வருகின்றனர் தற்போதைய இளைய தலைமுறையில் இந்திரா காந்தி குடும்பத்தின் ராகுலை கட்சித் தலைமைக்கு மீண்டும் அமர்த்துவதை பலரும் விரும்பவில்லை என்று தெரிகிறது 

இந்த நிலையில் தனது திறமைக்கு மதிப்பு இல்லை என்ற காரணத்தைக் கூறி மத்திய பிரதேச முதல்வர் பதவிக்கு குறி வைத்திருந்த ஜோதிராதித்யா சிந்தியா தனது எண்ணம் நிறைவேறாத நிலையில் 20 எம்எல்ஏக்களை அழைத்துக்கொண்டு பாஜகவில் சேர்ந்து காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து விட்டார் இதுபோல் ராஜஸ்தானிலும் அரசியல் நெருக்கடி தலைதூக்கி இருக்கிறது அங்கே சச்சின் பைலட் இதே போன்ற கருத்தை முன்வைத்து கட்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார் இது போல் பலரும் காங்கிரஸ் முகாமிலிருந்து வெளியேறி வரும் சூழலில் குஷ்புவின் கருத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது 

காங்கிரஸ் மனித உரிமை பிரிவு துணை தலைவராக இருந்த தாஸ் பாண்டியன் பாஜக.,வில் இணைந்து, தற்போது மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார். குஷ்புவும், இளைஞர் காங்கிரசாரால் விமர்சிக்கப்பட்டுள்ளார். உழைப்பவர்களை காங்கிரஸ் கைவிட்டு விடும். எனவே தன் உழைப்பு வீணாகாமல் இருக்க பாஜக.,வில் இணைந்தால் குஷ்புக்கு அரசியல் எதிர்காலம் உண்டு என்று கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version