Home அரசியல் அடுத்த முதல்வர் ஓபிஎஸ்! தேனியில் கிழிக்கப்பட்ட போஸ்டர்! அமைச்சர்கள் அவசர ஆலோசனை!

அடுத்த முதல்வர் ஓபிஎஸ்! தேனியில் கிழிக்கப்பட்ட போஸ்டர்! அமைச்சர்கள் அவசர ஆலோசனை!

10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது அரசியல் விமர்சகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

ops-ore-muthalvar
ops-ore-muthalvar

நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாடப்படும் சூழ்நிலையில் சென்னையில் சுதந்திர விழா கொண்டாட்டங்கள் முடிந்த கையோடு அரசியல் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது

 இன்று பாரத நாட்டின் 74 ஆவது சுதந்திரதின கொண்டாட்டங்கள் சீன வைரஸ் கொரோனா  தொற்று காரணமாக எளிய முறையில் நடைபெற்று வருகின்றது தற்போது தமிழகத்தில் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி நான்காவது முறையாக சென்னை கோட்டையில் சுதந்திர தின கொடி ஏற்றி வைத்துள்ளார் இதனிடையே தமிழகத்தில் அரசியல் சூழலும் பரபரப்பை எட்டியுள்ளது இதற்கு காரணமாக அமைந்தது ஒரு போஸ்டர் 

அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என்ற பளிச்சிடும் வாசகங்களுடன் தேனி பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மேலும் அந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்ட அதிமுகவினரிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது

மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் என்று கூறினார் பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, அதற்கு முன்னதாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது செல்லூர் ராஜு உதயகுமார் உள்ளிட்டோர் அதிமுக ஜனநாயகக் கட்சி எம்எல்ஏக்கள் ஆன நாங்களே அடுத்த முதல்வர் யார் என்பதை தீர்மானிப்போம் என்று திமுகவில் நடைபெறும் குடும்ப அரசியலை சுட்டிக்காட்டி  கருத்து தெரிவித்தனர் அதே நேரம் அது மறைமுகமாக ஓபிஎஸை சுட்டிக் காட்டியது.

rajendrabalaji-invite-edappadi
rajendrabalaji-invite-edappadi

இதனால் அதிமுகவிற்குள் மீண்டும் அடுத்த முதல்வர் குறித்து சலசலப்பும் பரபரப்பும் ஏற்பட தொடங்கிவிட்டது எடப்பாடி பழனிசாமி தனக்கு கிடைத்த வாய்ப்பை வைத்துக்கொண்டு தாம் ஒரு விவசாயி என்பதை மக்கள் மனதில் பதிய வைக்க அவ்வப்போது வயல் வரப்புகளில் இறங்கி நாற்று நடும் புகைப்படங்கள் எல்லாம் ஊடகங்களில் வருமாறு பார்த்துக்கொண்டார் மக்கள் மத்தியில் தான் ஏதோ ஏழைப்பங்காளன் போன்ற இமேஜை வளர்ப்பதற்கு பெரும் முயற்சி எடுத்தார் 

அதேநேரம் தான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை காட்டுவது போல் வெளிப்படுத்துவதற்காக பெரும்பான்மையினரின் அடிப்படை வழிபாட்டு உரிமைகள் முதற்கொண்டு கருத்து உரிமைகளை சிதைப்பதற்கு நசுக்குவதற்கு கட்டளைகளை பிறப்பித்து காவல்துறையினருக்கு உத்தரவு கொடுத்தார் சொல்லப்போனால்  கொரோனா பரவல் விதத்தில் அரசின் நடவடிக்கைகள் மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன 

அன்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களுக்கும் கொங்கு மண்டலத்திற்கும் சென்றபோது…. தேனியை முற்றிலும் புறக்கணித்து சென்றார். இது தேனி மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது முதல்வர் எடப்பாடி புறக்கணித்து சென்றது ஏன் என்ற கேள்வி எழுந்தது இந்த நேரத்தில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தபோது மீண்டும் ஓபிஎஸ் முக்கியத்துவம் பெறுவதாக கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது . ஓபிஎஸ்ஸை புறக்கணிக்கவே தேனி புறக்கணிப்பு என்று குற்றச்சாட்டு எழுந்தது.

ops eps
ops eps

தமிழகமெங்கும் தோற்க… தேனியில் ஓபிஎஸ் மகன் மட்டும் ஜெயித்த போதே… எடப்பாடி அதிருப்தியை வெளிப்படுத்தினார் என்கிறார்கள் அதிமுக.,வினர். அதே நேரம் தனது செல்வாக்கை ஓபிஎஸ் காட்டிவிட்டார் என்றனர் சிலர். இதனால், ஓபிஎஸ் தன் மகனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பிரசாரம் செய்ததாக… ஒரு குற்றச்சாட்டு அதிமுக.,வில் கிளப்பப் பட்டது. 

இப்படி நீறுபூத்த நெருப்பு போல கட்சிக்குள் இருந்து வந்த அதிருப்தி நிலைமை தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என்ற போஸ்டர்களால், கட்சியில் மீண்டும் இரட்டை தலைமை சலசலப்பு… ஏற்பட்டிருக்கிறது. 

இந்நிலையில் இன்று…  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மூத்த அமைச்சர்கள் சென்றனர். தலைமை செயலகத்தில் தனியாக ஆலோசனை நடத்திய நிலையில் முதலமைச்சரை சந்திக்க சென்றனர். 

தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் இது தொடர்பில் ஆலோசித்தனர். ஆலோசனை முடிந்த பிறகு முதலமைச்சரை சந்திக்க அமைச்சர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.பி. அன்பழகன், காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.சி. வீரமணி, பெஞ்சமின் ஆகியோரும் முதல்வரை சந்திக்கின்றனர். முன்னதாக, தலைமை செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறையில் இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது 

இதன் தொடர்ச்சியாக, ஓபிஎஸ் தலைமையில் மூத்த அமைச்சர்கள் அவசர ஆலோசனை மேற்கொண்டனர். 

சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில்  மூத்த அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், எஸ்.பி வேலுமணி, சிவி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது  அரசியல் விமர்சகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Translate »