ஜெயலலிதாவை விட அண்ணன் எடப்பாடிதான் பெஸ்ட்: செல்லூர் ராஜூ பகீர்!

உங்களை போன்ற ஊடகங்கள் தான் மு.க.ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் தருகின்றன என்றும் அதன் மூலம் அவர் தினமும் விளம்பரத்தில் வருவது போல வருவதாகவும், அதை அவர் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

Sellur Raju
Sellur Raju

கரூர்:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை விட தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிகமாக மக்களுக்கு தந்து வருகின்றார் – எடப்பாடி பழனிச்சாமியின் திட்டத்தை பார்த்தால் மு.க.ஸ்டாலின் பக்கத்தில் கூட நிற்க முடியாது – கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கரூரில் சர்ச்சை பேட்டி அளித்துள்ளார்.

தமிழக அளவில் மட்டுமில்லாமல், இந்திய அளவில் ஒரு நல்ல அரசியல்வாதியும், இரும்பு பெண்மணியாக இருந்தவர் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆவார். இந்நிலையில் அவரது இறப்பிற்கு பின்பு, அ.தி.மு.க என்பது ஒரு பிளவு பட்ட இயக்காக மாறியதோடு, அமைச்சர்களின் சர்ச்சை பேச்சு அளவிற்கு அதிகமாகவும் இருந்து வருவதை நாம், பார்க்க முடிகின்றது. எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும், எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், அ.தி.மு.க பொறுத்தவரை அம்மா தான் என்று கூறி ஆரம்பித்து பின்பு முடிப்பார்கள். ஆனால் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு படி மேல் சென்று, அறிமுகப்படுத்தியது அம்மா தான், அதை அதிகப்படுத்தியது அண்ணன் எடப்பாடி அரசு தான் என்றார்.

கரூர் அருகே உள்ள தாந்தோன்றிமலை தனியார் மஹாலில் கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்த போது, முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த 55 திட்டங்களில் 18 திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்நிலையில், தற்போது ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதாகவும், குறிப்பாக தாலிக்கு தங்கம் 4 கிராமிலிருந்து 8 கிராம் என்பதை முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே அறிவித்தும், செயல்படுத்தினார்.

ஆனால் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதுவும் 4 கிராம் அறிவித்தார். தற்போது, 8 கிராமாக அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அரசு தான் என்றும், அதே போல், கர்ப்பினி பெண்களுக்கு 12 ஆயிரம் நலத்திட்ட உதவியிலிருந்து 18 ஆயிரமாக தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி தான் வழங்கி வருவதாகவும் அதுவும் எடப்பாடி பழனிச்சாமி தான், என்றும், மகளிர்களுக்கு ஸ்கூட்டர் வழங்குவதும் தற்போது தான் என்று பேட்டியளித்ததுடன் அப்போதே, போக்குவரத்து துறையை பார்த்து ஏன்ப்பா ? செயல்படுத்திகிட்டு இருக்கின்றதா ? என்றும் கேட்டார். அதே போல, குடிமராமத்துப்பணி 1019 ஐ நிறைவேற்றி இருக்கின்றோம் என்றார்.

அதே போல, 2065 ஏரி குளங்களை மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமியின் முயற்சியால் தான் சீரமைக்கப்பட்டுள்ளது என்றார். அதன் பிறகு இந்திய அளவில் வறட்சி தமிழகத்தை வாட்டியது, அப்படி இருந்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் வறட்சி நிவாரண நிதியையும் மத்திய அரசிடம் கேட்டு வாங்கியதாக கூறினார். மேலும் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமியின் திட்டத்தை எல்லாம் பார்த்தால் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எங்கள் பக்கத்திலே நிற்க முடியாது, மேலும் சட்டமன்றத்தில் எங்களிடம் கேட்க மாட்டுகின்றார்.

உங்களை போன்ற ஊடகங்கள் தான் மு.க.ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் தருகின்றன என்றும் அதன் மூலம் அவர் தினமும் விளம்பரத்தில் வருவது போல வருவதாகவும், அதை அவர் விரும்புவதாகவும் தெரிவித்தார். பேட்டியின் போது, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடனிருந்தார். முன்னதாக கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள அம்மா மருந்தகத்தில் திடீர் ஆய்வு நடத்தி பின்பு கூட்டுறவு வாரவிழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

[su_youtube url=”https://www.youtube.com/watch?v=NV_WvlmeHGg” width=”720″ autoplay=”yes”]

- Advertisement -