spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைதிருமாவைப் போல் விலை போகாமல்... இவர்கள் காத்திருக்கிறார்கள்!

திருமாவைப் போல் விலை போகாமல்… இவர்கள் காத்திருக்கிறார்கள்!

- Advertisement -
swami-sahajananda1
swami sahajananda1

ஹிந்து சமூகத்தில் மனு ஸ்மிருதியைப் போல் யாக்ஞவல்கிய ஸ்மிருதி, ஆபத்ஸ்தம்ப ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி போன்ற மேலும் 17 ஸ்மிருதிகளும் பாரத்வாஜ ஸ்மிருதி, நாராயண ஸ்மிருதி, தேவால ஸ்மிருதி உள்ளிட்ட மேலும் 14 உப ஸ்மிருதிகளும் உள்ளன.

காலத்தின் தேவைக்கு ஏற்ப சட்டங்கள் மாறும், திருத்தங்கள் செய்யப்படும், புதிய சட்டங்கள் இயற்றப்படும். அதற்கேற்ப நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட ஹிந்து சமூகத்தில் காலத்தின் தேவைக்கேற்ப புதுப்புது ஸ்மிருதி எனப்படும் நீதி நூல்கள் இயற்றப்பட்டன. இதுதான் உண்மையான ஜனநாயகம்.

ஆனால் அவற்றைத் திரித்துப் பேசுவதும், அர்த்தமும் பின்னணியும் புரியாமல் மனம் போன போக்கில் தப்பர்த்தம் கூறி தடாலடி வார்த்தைகள் கூறிப் பிதற்றுவதும் தற்கால அரசியல்வாதிகளின் அறிவீனம், ஆணவம். ஹிந்துக்களின் விழிப்புணர்வால் அவை விரைவில் அகற்றப்பட வேண்டும், அகற்றப்படும்.

மனு நீதி தவறானது என்றால் மனு நீதிச் சோழன் என அக்காலத் தமிழ் மன்னன் ஏன் பெயர் சூட்டிக் கொண்டான்?

swami-sahajananda

திருமா கூறுவதைப் போல தமிழ்நாட்டு ஹிந்துப் பெண்கள் வேசி என அவனும் ஏற்றுக் கொண்டுவிட்டானா? அல்லது சோழ மன்னனின் பரம்பரைக்கு சற்றும் தொடர்பே இல்லாமல் வளவன் என்ற அவர்களது குலப் பெயரை தனக்குத் தானே சூட்டிக் கொண்டிருக்கும் திருமாவைப்போல் அவனும் என்ன மூளையில் குருமா இல்லாத கருமாந்திரமா?

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்றதால் பெண்ணடிமையை வளர்த்ததாகவும், மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் என்றதால் பிறவியிலேயே பார்ப்பான் உயர்ந்தவன் என்று சொம்படித்ததாகவும் கூறி திருக்குறளையே தடை செய்யுமாறுகூட இதுபோன்றோர் எதிர்காலத்தில் கேட்பார்கள்.

திருக்குறளை தங்கத்தட்டில் வைக்கப்பட்ட மலம் என்று கூறிய ஈவேராவின் முட்டாள் சீடர்கள் தானே இவர்கள்! பார்ப்பான் பிறப்பு என்பது கடும் பயிற்சிகளாலும் வாழ்நெறிகளாலும் அடையப்படும் துவிஜன் எனப்படும் இரண்டாம் பிறப்பு என்ற நுட்பம் ஹிந்து எதிர்ப்பாளர்களுக்கு மட்டுமல்ல ஆதரவாளர்களுக்கே தெரிவதில்லையே!

மக்களுக்காக மதமா மதத்துக்காக மக்களா எனக் கேட்பார்கள் பகுத்தறிவுவாதிகள். இந்தப் பகுத்தறிவே ஹிந்துப் பண்பாடு போட்ட பிச்சை. மக்களுக்காக மதம் என்று சிந்தித்ததால்தான் அவரவர் பகுத்தறிந்து பின்பற்றுவதற்கு ஏற்ப பல்வேறு சமய, தத்துவ நெறிகளை சமைத்துள்ளது ஹிந்து சமூகம்.

ஒற்றை சாஸ்திரத்தை நம்பி கட்டமைக்கப்பட்டதல்ல ஹிந்து தர்மம். தேவையில்லை எனில் எந்தவொரு சாஸ்திரத்தையும் தூக்கியெறியும், புதியது படைக்கும். அதேநேரத்தில் அறிவை விரிவுபடுத்த வேண்டாம், இருக்கின்ற அறிவில் எள்முனையைக் கூட பயன்படுத்தாமல் வெறுமனே பயம் காட்டுவோம் என்றிருக்கும் வீணர்களை விரட்டிடும் வீரியம் ஹிந்து சமூகத்துக்கு உண்டு.

கபடவேடதாரியான திருமா ஈழப் பிரபாகரனிடம் பௌத்தமே தமிழர் வழி ஆகையால் ஹிந்து மதத்தை உதறிவிடுங்கள் என தைரியமாக கூறியிருக்க முடியுமா? இல்லையேல் இஸ்லாமியர்களுடன் எங்களைப் போல் தொப்புள்கொடி உறவு என்று கதையுங்கள் என்றாவது பேசியிருக்க முடியுமா?

அவ்வளவு ஏன், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களை ஈழத் தமிழர்கள் உதாசீனப்படுத்தியதற்கு காரணம், அவர்களில் பெரும்பாலானோர் தலித்துகள் என்பதால் தானா என்றாவது தனது தலைவன் என்று கூறிக் கொள்ளும் பிரபாகரனிடம் திருமா தைரியமாக கேட்டிருக்க முடியுமா?

திராவிட மாயையைப் பரப்பும் ஹிந்து எதிர்ப்பாளர்களே, பசும்பொன் தேவர், சுவாமித் தோப்பு ஐயா வைகுண்டர், கிறிஸ்தவ மதத்துக்கு மாற மறுத்ததால் துயருற்ற போதிலும் திருமாவைப் போல் விலை போகாமல் பறையர் சமுதாய மேம்பாட்டுக்காகப் பாடுபட்ட ஹரிஜனத் துறவியும் சிதம்பரம் தொகுதி முன்னாள் MLA-வுமான சுவாமி சகஜானந்தர் போன்ற உத்தமசீலர்கள் மறைந்து விடவில்லை, மறுபிறப்பெடுத்து காத்திருக்கிறார்கள்.

  • கருத்து: பத்மன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe